இலங்கை தொடர்பான புதிய காணொளியை வெளியிட்டது அல்யசீரா(காணொளி)

இலங்கையில் போரின்போதிலிருந்து இன்றுவரை 60ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாகவும் பல்லாயிரம் மக்கள் தொடர்ந்து காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு போராடிவருவதையும் தனது ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டியுள்ளதோடு,
கடத்தப்பட்டவர்கள் எவ்வாறான வன்முறைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள் என்றும் அவர்கள் துன்புறுத்தல்,சித்திரவதை,பாலியல் துன்புறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள் எனவும் ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கையில் வசிக்கமுடியாது இங்கிலாந்தில் உயிர்த் தஞ்சம் அடைந்துள்ள சிலரது வாக்குமூலங்களையும் பெற்று அது தொடர்பாக அங்கு பணியாற்றும் சட்டவாளர்களிடமும் தகவல்களை திரட்டி அல்யசீரா வெளியிட்டுள்ளது.