Breaking News

தனிப்பட்ட அரசியலுக்காகவே மனோகணேசன் போர்க்குற்ற விசாரணையை முன்னெடுத்தாா் !

போர்க் குற்றம் தொடர்பாக உள்ளக விசாரணைகள் மட்டும் போதுமானது என்று நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் கூறியிருப்பது அவரது அரசி யல் காரணங்களுக்காகவே என வட மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரிலே நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வ தேச விசாரணைகள் குறித்து இலங் கையின் தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோகணே சன் கடந்த வாரம் கருத்துரைத்துள் ளாா். 

அக் கருத்தில், போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை இல்லை என்றும், குறித்த பிரச்சினைகளை உள் நாட்டிலேயே பார்த்துக் கொள்ள முடியும் என்றும் இலங்கையின் நல்லிணக்கத்திற்குப் பொறுப்பாக உள்ள அவர் தெரிவித்துள்ளாா்.

இது தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற மாகாண சபையின் முதலமைச்சர் என்ற வகையில் உங்க ளின் கருத்து எவ்வாறு இருக்க முடியுமெனக் கேட்கப்பட்டிருந்தது.

குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்,

”சர்வதேச உள்ளீடுகள் அல்லாத விசாரணை நன்மை பயக்காது என்பது இலங் கையில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். அது தம்பி மனோகணேச னுக்கும் தெரியும். ஆனால், மனோகணேசன் அரசியல் காரணங்களுக்காகவே அவ்வாறு சொல்லியிருக்கலாம்.

நான் அவரின் கூற்றைக் காணவில்லை, அவ்வாறு அந்த கூற்றை முழுமை யாக வாசித்துப் பார்க்கக்கிடைத்தால் அவர் எதற்காக அவ்வாறு கூறினார் என் பதைக் காணமுடியும். இதைவிட இது தொடர்பில் மேலதிக விடயங்களை என் னால் கூறமுடியாது.” என்றார்.

இதேவேளை, மனோகணேசன் கடந்த 2010 ஆம் ஆண்டிற்கு முன்பே போர்குற்ற விசாரணைகள் அவசியமற்றவை என அமெரிக்காவுக்கு இரகசியமாக கூறியி ருந்ததாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கடந்த வாரம் ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்திருந்தார்.

இவ் விடயம் அப்போதைய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா ஊடாக வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்டதாக விக்கி லீக்கில் வெளியாகிய தெனெ குறிப்பிட்ட சிவாஜிலிங்கம், இது அவருடைய அடிமை விசுவாசத்தைத் தான் காட்டி நிற்பதாக தெரிவித்துள்ளாா்.