வீட்டிலிருந்து 17வயது சிறுமியின் சடலம் மீட்பு!
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் தகரக் கொட்டிலில் இருந்து 17 வயது சிறுமி ஒருவரின் சடலம் இன்றைய தினம் (14-05-2018) திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
தாழங்குடா வேடர் குடியிருப்பு கடற் கரை வீதியை அண்டிய பகுதியில் வசிக்கும் சகாயநாதன் விதுசனா (வயது 17) என்பவரின் சடலமே இவ் வாறு மீட்கப்பட்டுள்ளது.
இந்த யுவதியின் தந்தை மத்திய கிழ க்கு நாடொன்றில் தொழில் புரிவதாக வும் குடும்பம் சுமுகமாக வாழ்க்கை நடாத்துவதாகவும் இவர் கடந்த ஆண்டு கல்விப்
பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததாக உற வினர்கள் தெரிவித்துள்ளனா்.
கடைசியாக திங்கட் கிழமை காலை 8:30 மணி வரையில் தனது நண்பர்களுக்கு தனது கைபேசியில் இருந்து குறுந் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருந் துள்ளார் என்பதும் விசாரணையின் மூலம் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சடலம் உடற் பரிசோதனைக்காக ஆரையம்பதி மாவட்ட வைத் தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.