பாடசாலை மாணவி சடலமாக மீட்பு ; வவுனியாவில்.!
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றில் பாட சாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் வசி த்து வந்த யோ. மிதுன்ஜா 17 வயதுடைய உயா்தரத்தில் கல்வி பயின்ற மாணவி ஒரு வர் கடந்த புதன்கிழமை கல்வி பயின்ற பாட சாலையில் பெற்ற உயர்தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வில் கலந்துள்ளாா்.
அன்றிலிருந்து வீட்டில் மாணவியின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டிருந்த தாகவும் மன அழுத்தத்திலிருந்ததை அவதானிக்க முடிந்துள்ளதாக உறவினர் களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு இரவு படுக்கைக்குச் சென்ற மாணவி இன்று அதிகாலை 4 மணியள வில் படுக்கை அறைக்கு மாணவியை எழுப்புவதற்குச் சென்ற தாயார் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் அவதானித்துள்ளார்.
இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவி யின் இறப்புக்கான காரணம் தெரியவரவில்லை இது தொடர்பாக மேலதிக விசாரணைகளைப் பொலிசார் முன்னெடுத்துள்ளனா்.









