செம்மணிப் படுகொலை நினைவு நாள் இன்று.!
யாழ். செம்மணிப் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நினைவு கூரப்பட்டுள்ளது.
செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிரிசாந்திக்கு இன்று அஞ்சலிக்கப்பட்டு கிரிசாந்தியுடன் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மூன்று பேர் உட்பட, படுகொலை செய் யப்பட்டு செம்மணியில் புதைக்கப் பட்டவர்களுக்கும் அஞ்சலிக்கப்பட் டுள்ளது.
இந் நிகழ்வில் ஆரம்ப பிரிவு மாணவர்கள் பலருக்கு கற்றல் உபகாரணங்களும் வழங்கப்பட்டதுடன் இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், கிரிசாந்தினியின் உறவினர்கள், அயலவர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து அஞ்சலி செலுத்தியுள்ளனா்.











