Breaking News

கிளிநொச்சியில் காப்புறுதி முகாமையாளா் மீது தாக்குதல், பணம் கொள்ளையடிப்பு.!

கிளிநொச்சி இரணைமடுவில் நேற்று அதிகாலை 1.00மணியளவில் பஸ்ஸி லிருந்து இறங்கி பாரதிபுரத்திலுள்ள விடுதிக்கு நடந்து  கொண்டிருந்த தனியார் காப்புறுதி முகாமையாளரை வழிமறித்த இனந்தெரியாத எட்டு பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியதுடன் பணப்பையையும் பறித்தது டன் தப்பிச்சென்றுள்ளனர். 

 மேலும் தெரிய வருகையில், 

கிளிநொச்சியில் தனியார் காப்புறுதி நிறுவ னம் ஒன்றில் முகாமையாளராக கடமை யாற்றி வரும் எஸ். வினிஸ்கரன் மார்க் நேற்று முன்தினம் பஸ்ஸிலிருந்து மன்னா ருக்கு தனது சொந்த தேவை காரணமாக சென்று திரும்பி வரும்போது நேற்று அதி காலை ஆனது. பஸ்ஸிலிருந்து இறங்கி விடுதியினை அண்மித்த சமயத்தில் 1.15மணியளவில் 25தொடக்கம் 30வயதுடைய எட்டு பேர் கொண்ட இளைஞர் கள் குழுவால் குறித்த முகாமையாளரை வழிமறித்து உன்னில் எங்களுக்கு சந்தேகம் ஏற் பட்டுள்ளது.

உன்னுடைய அடையாள அட்டையை காட்டு எனக்கூறி உன்னுடைய இருப்பி டத்திலும் சந்தேகம் உள்ளது எனக்கூறி வலுக்கட்டாயமாக மோட்டார்‌ சைக் கிளில் ஏற்றி கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாது அவரிடம் இருந்த பணப்பையையும் பறித்துக்கொண்டு தப்பித்துச்சென்றுள்ளனர்.

காயமடைந்து மயக்க நிலையில் இருந்த தனியார் காப்புறுதி முகாமையாளர் அயலவர்களினால் காப்பாற்றப்பட்டு அவசர‌ இலக்கமான 119 ற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்களால் குறித்த முகாமையாளர் கிளி நொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

அப் பணப்பையில் 21,900ரூபா பணமும், அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம் போன்றவை இருந்ததாகவும், தாக்குதல் நடத்திய இளைஞர் குழு மது போதையில் இருந்ததாகவும் குறித்த முகாமையாளரால் இன்று காலை வைத் தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளாா்.