யாழ்.சுழிபுரத்தில் இறால் பிடிக்கும் கூட்டில் சருகு புலி.!
யாழ்.சுழிபுரம் - சவுக்கடி கடற்கரையில் மீனவர்களின் இறால் பிடிப்பதற்கான கூட்டினுள் இன்று காலை சருகு புலி சிக்கியுள்ளது.
மேலும் தெரியவருவதாவது,
சவுக்கடி கடற்கரையில் மீனவர்கள் இறால் பிடிப்பதற்கான கூடுகளை வைப்பது வழக்கம். இவ்வாறு நேற்று மாலை கூடுகளை வைத்துவிட்டு சென்ற மீனவர்கள் இன்று காலை திரும்பவும் கடற்கரைக்கு வந்தபோது இறால் கூட்டுக் குள் சருகு புலியை கண்டுள்ளனா்.
இதனையடுத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வனஜீவராசிகள் திணைக் களத்திடம் குறித்த சருகு புலியை ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.








