Breaking News

"காணாமல் போன இளைஞன் இராணுவ முகாமுக்குள் நகா்ந்ததை நேரில் பாா்த்தேன்"

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர், இரா ணுவ முகாமுக்குள் நகா்ந்ததை நேரில் கண்டதாகவும் அவரை மறுநாள் காலை காணவில்லை எனவும் நபர் ஒருவர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளாா்.

அரியாலை பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழ க்கு விசாரணைகள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணை க்காக உள்வாங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமது மகன் இராணுவ முகாமுக்குள் சென்றதாகவும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட தாகவும் நேரில் கண்ட பெண் ஒருவர் பலாலி இராணுவ முகாமுக்கு வந்து வாக்குமூலம் வழங் கினார் என்றும் அப் பெண் தற்போது இறந்துவிட்டார் என்றும் இளைஞனின் தாயார் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளாா்.

வழக்கு நேற்று விளக்கத்துக்கு வந்த போது, 5ஆவது பிரதி வாதியான சட்டமா அதிபர் சார்பில் மூத்த அரச சட்டவாதி நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளாா்.

அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் இவ் வழக்கில் மனுதாரரால் முற்படுத்தப்பட்ட கண்கண்ட சாட்சியிடம் அரச சட்டவாதி குறுக்கு விசார ணையை முன்னெடுத்துள்ளாா்.

யாழ்ப்பாணம் அரியாலை துண்டி இராணுவ முகாமுக்குள் இளைஞர் சென் றதை அவதானித்தேன். அவரை மறுநாள் காலை காணவில்லை என உற வினர்கள் தெரிவித்துள்ளனா்.” என்று குறுக்கு விசாரணையில் கண்கண்ட சாட்சி சாட்சியமளித்துள்ளார்.