Breaking News

இடைக்கால அரசாங்கம் குறித்து பேச்சு வார்த்தை நடைபெறவில்லை - மகிந்த.!

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனை மாத்திரமே முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இது குறித்து பேச்சுவார்த்தைகள் எவையும் நடைபெறவில்லையெனத் தெரி வித்துள்ளாா்.

நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படு வதை தவிர்ப்பதற்காக நாங்கள் தலை யிட விரும்புகின்றோம் மக்களை காப் பாற்ற விரும்புகின்றோமெனத் தெரி வித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கம் குறித்து பேச்சு வார்த்தைகள் எவையும் இது வரை நடைபெறவில்லை மகிந்த ராஜ பக்ச தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனை முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இடைக் கால அரசாங்கமொன்று அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ள தாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் மற்றைய தரப்பிலிருந்து இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டால் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் தீர்மா னிக்க தயார் எனத் தெரிவித்துள்ளாா். இலங்கையில் எரிபொருள் விலை மாற் றங்கள் குறித்து எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது என்பது எவரிற்கும் தெரி யாதென மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்வதற்கான சூத்திரம் என்னவென் பது குறித்து ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ தெரியாது, என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி நிதியமைச்சர் கூட தனக்கு தெரியாதென தெரிவித்துள் ளார்.