Breaking News

மோடி, சிறிசேன உரையாடல் குறித்து இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவிப்பு.!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரோ குறித்து தான் தெரிவித் ததாக வைரலாகும் தகவல்களை மறுப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி யின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இந்திய பிரதமரின் அலுவலகம் இது குறித்து செய்திக்குறிப்பொன்றை விடு த்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரத மருடன் தொலைபேசி மூலம் உரை யாடியதாக இந்திய பிரதமரின் அலு வலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி தன்னையும் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செய லாரையும் கொலை செய்வதற்கான சதி முயற்சிகளின் பின்னால் இந்திய புல னாய்வு அமைப்பு உள்ளதாக தான் குற்றம் சாட்டப்பட்டு வெளியாகியுள்ள செய் திகளை நிராகரித்துள்ளதாக  இந்திய பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தீயநோக்கத்துடனான தவறான அறிக்கைகள் ஆதாரமற்றவை பிழையானவை என சிறிசேன தெரிவித்தார், எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இந்திய பிரதமர் அலுவலகம் இச் செய்திகள் இரு தலைவர்களிற்கு இடை யி லான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டவை என சிறிசேன தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக் கத்தை அடிப்படையாக கொண்ட முயற்சியிதுவெனவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்திகளை நிராகரிப்பதற்காக தானும் இலங்கை அரசாங்கமும் உட னடியாக எடுத்துள்ள நடவடிக்கைகளையும் சிறிசேன இந்திய பிரதமரிற்கு தெளிவுபடுத்தியுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திரமோடியை இலங்கையின் உண்மையான நண்பராகவும் தனது சிறந்த நண்பராகவும் கருதுவதாக சிறிசேன தெரிவித்தார் என இந்திய பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பரம் நன்மையளிக்க கூடிய உறவுகளை தான் மதிப்பதாக சிறிசேன வலியுறுத்தியுள்ளார், இந்திய பிரதமருடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆர்வமுள்ள தாகவும் சிறிசேன தெரிவித்ததாக இந்திய பிரதமரின் அலுவலகம் தெரிவித் துள்ளது.

இதேவேளை இவ் விவகாரம் தொடர்பில் தீயநோக்கம் கொண்ட தகவல்களை நிராகரிப்பதற்கு இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் எடுத்துள்ள துரித நடவடிக்கையை இந்திய பிரதமர் பாராட்டியதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அயல் நாடுகளிற்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையை மீண்டும் இந்திய பிரதமர் வலியுறுத்தியதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள் ளது.