Breaking News

இராஜதந்திரிகளுடன் இரகசிய பேச்சுக்களாம் கூட்டமைப்பு - மாவை

ஸ்ரீலங்கா அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக் காது விட்டால் அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுப்பதற்கான பேச்சு வார்த் தைகள் இராஜதந்திர ரீதியில் முன்னெடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத எந்தவொரு தீர்மானத்தையும் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெ னத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட நூறு மாணவர்க ளுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு துணுக்காய் வலயக்கல்வி அலு வலகத்தில் துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் நடைபெற் றுள்ளது.

வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் வ கமலேஸ்வரனின் நிதியிலி ருந்து கொள்வனவு செய்யப்பட்ட நூறு துவிச்சக்கர வண்டிகளோ இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 90மாணவர்களுக்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் 10 பேருக்குமாக நூறு பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை யில் நிறைவேற்றப்பட்ட 34. ஒன்று தீர்மானமானது தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானதெனத் தெரிவித்துள்ளாா்.