Breaking News

உலகக் கிண்ணம் வென்றதை போன்ற உணா்வு ஏற்பட்டதாக - இம்ரான் கான்

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுவிட்டு தாய்நாடு திரும்பிய பாகிஸ் தானின் பிரதமர் இம்ரான் கான் அங்கு அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பை யடுத்து தான் உலகக் கிண்ணத்தை வெற்றதைப்போன்ற உணா்வு ஏற்பட்டு ள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு மூன்றுநாள் உத்தி யோகபூர்வ விஜயத்தை மேற் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விஜயத்தை நிறைவு செய்த பின்னர் நேற்றைய தினம் தாய் நாடு திரும்பிய நிலையில் பாகிஸ்தா னில் பெரும் வரவேற்பு வழங்கப்பட் டுள்ளது.

வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்பால் பூரிப்படைந்த இம்ரான் கான், நீங்கள் அளிக்கும் வரவேற்பை பார்த்தபோது, நான் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து வந்தது போல தெரியவில்லை. மாறாக உலகக் கிண்ணத்தை கைப் பற்றிவிட்டு தாய்நாடு திரும்பிய உணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.