சுமந்திரன் தோல்வி - சசிகலாவை விலகுமாறு அழுத்தமாம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ்மாவட்டத்தில் போட்டியிட்ட சுமந்திரன் தோல்வியடைந்துள்ளதாக யாழ் செயலகத்திலிருந்து கிடைக்கும் உத்தியோகப்பற்றற்ற முடிவு மூலம் தெரிய வருகின்றது.
யாழ் கிளியை உள்ளடக்கிய யாழ் தேர்தல் மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பு சார்பில் சிறிதரன்,சித்தார்த்தன்,சசிகலா ரவிராஜ் ஆகியோர் விருப்பு வாக்கின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையிலேயே சசிகலா ரவிராஜ் இற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் மூலம் தெரியவந்துள்ளது. அவரிடம் ஏற்கனவே வாங்கப்பட்ட கடிதம் ஒன்றினை வைத்து அவரை நீக்கி இன்னொருவரை கொண்டுவருவதற்கான சுத்துமாத்துக்களை தமிழரசு கட்சி செய்துவருவதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்








