Breaking News

இலங்கை நியூசிலாந்து அணிக்கு இடையிலான 3வது ரி20 கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்துக்கு 183 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

 


இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3வது ரி20 கிரிக்கெட் போட்டி தற்போது குயின்ஸ்டவுனில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பைு தெரிவு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 73 ஓட்டங்களை பெற்றார்.

நியூசிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் Ben Lister 2 விக்கெட்டுக்களையும் Adam Milne மற்றும் Ish Sodhi ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.