Breaking News

பாலஸ்த்தீனத்துக்கு இலங்கை, இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவு!(காணொளி)


ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில், பாலத்தீனுக்கு தனி மற்றும் சுயாட்சி பெற்ற நாடு என்ற அந்தஸ்தை வழங்கும் முன்மொழிவு கடந்த வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பிற்கு வந்தது. இந்த முன்மொழிவு ‘நியூயார்க் பிரகடனம்’ என அழைக்கப்படுகிறது.

உலகின் 193 உறுப்பு நாடுகளில் 142 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அதேசமயம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட 10 நாடுகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகின.


ஆதரவு தெரிவித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா, கத்தார், உக்ரைன், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற முக்கிய சக்திகள் அடங்குகின்றன. இது, பாலத்தீன் பிரச்சினையை சர்வதேச அளவில் பெரும்பான்மையான நாடுகள் ஆதரிக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், வாக்கெடுப்பிற்கு சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மேற்குக் கரையில் உள்ள அடுமிம் குடியேற்றத்தில் உரையாற்றியபோது, “பாலத்தீன் நாடு ஒருபோதும் உருவாகாது; இந்த நிலம் எங்களுக்கே சொந்தமானது” என்று தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்து, வாக்கெடுப்பில் இஸ்ரேல் எடுத்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இதனால், பாலத்தீனுக்கு ஆதரவாக பெரும்பான்மையான சர்வதேச ஒற்றுமை உருவாகியுள்ள போதிலும், சில நாடுகளின் கடுமையான எதிர்ப்பு தொடர்ந்து அந்த பிரச்சினையை சிக்கலாக்கி வருகிறது.


இது தொடர்பாக பி.பி.சி தமிழின் செய்தியொன்று

   


 தொடர்புடைய செய்திகள்


சனல் 4 செய்திகள் பொய்-மகிந்தவின் பாணியில் சுமந்திரன்(காணொளி)

கலப்பு விசாரணையே நடக்கும் – சுமந்திரன் (நேர்காணல் இணைப்பு)

கையொப்பமிட்ட 7முட்டாள்கள் முடிவை மாற்றினர்-வவுனியாவில் பரபரப்பு(காணொளி) 

சிறிலங்கா அரசின் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு ! ஐ.நாவில் கஜன்(காணொளி) 

ஐ.நா மனிதவுரிமை பேரவையில் இன்று கஜன் (காணொளி) 

கால அவகாசம் எதற்கு..? ஐ.நா மனித உரிமை பேரவையில் கஜேந்திரகுமார்(காணொளி)