விசாரணை அதிகாரியை தாக்கும் புத்த பிக்கு -காணொளி இணைப்பு - THAMILKINGDOM விசாரணை அதிகாரியை தாக்கும் புத்த பிக்கு -காணொளி இணைப்பு - THAMILKINGDOM
 • Latest News

  விசாரணை அதிகாரியை தாக்கும் புத்த பிக்கு -காணொளி இணைப்பு


  கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார சபை
  விசாரணைப் பிரிவின் உத்தியோகத்தர் மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையில் மின்சார பாவனையை பார்வையிட சென்ற போது அங்குள்ள பிக்கு இவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

  இச்சம்பவம் கடந்த புதன்கிழமை 22.10.2014 இல் இடம்பெற்றுள்ளது. பௌத்த விகாரையில சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பாவிப்பது தொடர்பாக முறைப்பாடு கிடைத்ததை அடுத்து அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சென்றபோது விகாரைக்கு பொறுப்பான அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரரால் தாக்கப்பட்டதோடு, அவதூறான வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளார்.


  அத்தோடு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சனாதிபதி மகிந்த ராஜபக்சேவிற்கும் காரசாரமான வார்த்தைப்பிரயோகம் மூலம் அர்ச்சனை வழங்கப்பட்டுள்ளது. என்பதோடு சம்பவம் நடைபெற்ற வரை விசாரணை அதிகாரியோடு சென்ற பொலிசாரும் அமைதியாக சம்பவத்தை பார்வையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த காணொளியை நேற்றைய தினம் சனாதிபதியின் பிரத்தியேக செயலகத்திற்கும் கிடைத்துள்ளதாகவும் இதுதொடர்பின் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: விசாரணை அதிகாரியை தாக்கும் புத்த பிக்கு -காணொளி இணைப்பு Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top