Breaking News

உள்ளுராட்சி தேர்தலை பழைய எல்லை நிர்ணயப்படி நடாத்தவும்

உள்ளுராட்சி சபை தேர்தல் இன்னும் காலதாமதப்படுத்தாமல் அவசரமாக நடாத்தப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்குரிய ஒரு நிறுவனத்தை ஆளுநரின் நிறுவாகத்தின் கீழ் இன்னும் வைத்திருப்பது தவறானது. எந்தவொரு காரணத்தைக் காட்டியும் தேர்தலைப் பின் போட முடியாது.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணயத்தை மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்க முடியாது. அது திரிபுபடுத்தப்பட்ட ஒன்றாகவே அமைந்துள்ளது. அது கடந்த கால அரசியல் வாதிகளின் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால், புதிய எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு புதிய எல்லை நிர்ணயம் செய்வதற்கு முடியாவிடின், பழைய முறைமையின் கீழ் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.