Breaking News

பிள்ளையான் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று செவ்வாய்க் கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அக்கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

பிள்ளையானை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.