கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் - கூட்டமைப்பு
தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தில் ஆதரவாக பல போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்று, தங்கள் விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு குறிப்பிட்டார்.








