Breaking News

பிரதமர் ஹக்கீமிற்கு உறுதிமொழி

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர் ரவுப் ஹக்கீமிற்கு உறுதிமொழி  ஒன்றை வழங்கியுள்ளார். 

நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சிலிருந்து நீக்கப்பட்ட துறைகள் மீள வழங்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.கண்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சுக்களுக்கு துறைகள் பிரிந்து செல்வது குறித்து திருப்தி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.நல்லாட்சி அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.