வடமாகாண சபையை மீண்டும் எச்சரித்தது அரசாங்கம்..!!
நாட்டை பிளவுபடுத்தும் அல்லது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான எந்தவொரு விடயத்திற்கும் ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லையென அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது தொடர்பில் வட மாகாண அரசில்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும் எனினும் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்புப் படையினரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக எதிரணியின்ர பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்திவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவு அராசங்கத்தின் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதக எழுந்துள்ள குற்றச்சாட்டினையும் மறுத்துள்ள அவர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுடன் புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்துகொள்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வட மாகாண சபை வெளியிட்ட உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான முன்மொழிவுகளில் தமிழ் பேசும் மக்களுக்கு தனியான அரசினை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








