Breaking News

பிரபாகரனின் உயிரிழப்பு உண்மையா? : பாதுகாப்புச் செயலாளர் பதில்



விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்ற நிலையில், அவ்வாறான கருத்துக்கள் குறித்து கரிசனை கொள்ளத் தேவையில்லையென பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்படுவதை தாம் நம்பவில்லையென்றும், பிரபாகரனின் மரணச் சான்றிதழை வெளியிடும் பட்சத்திலேயே அதனை ஏற்றுக்கொள்ள முடியுமென்றும், அண்மையில் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த எத்தனையோ பேருக்கு இன்றுவரை மரண சான்றிதழ் கிடையாதென தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், பிரபாகரனின் உயிரிழப்பு குறித்து வெளியாகும் கருத்துக்கள் குறித்து அவதானம் செலுத்தத் தேவையில்லையென தெரிவித்துள்ளார்.