Breaking News

பிரதமர் குறித்து அதிர்ச்சிகர செய்தி வெளியிட்ட அனுரகுமார

மத்திய வங்கியின் முறி விற்பனைக்கும் அதன் பின்னரான செயற்பாடுகளுக்கும் பிரதமருக்கு நேரடி தொடர்பு உள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.

ஜே.வி.பி யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜேவிபியின் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனரின் வாக்கு மூலத்தில் பிரதமரின் செயற்பாடுகள் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது பிரதமர் மத்திய வங்கியின் முறி விற்பனையை ஏல அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கியதாக அர்ஜுன மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், முறிவிற்பனை தொடர்பிலும் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணைகளில் இருந்தும், பிரதமரால் விலகிகொள்ள முடியாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த தேர்தலின் போது ஊழலுக்கு எதிராக அரசாங்கம் செயல்படும் என்ற வாக்குறுதியை மழுங்கடித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.மத்திய வங்கியானது பொது மக்களின் பணத்தை வீண் விரயம் செய்யும் நிறுவனங்களில் முக்கிய இடத்தை பெற்றிருந்தது.இதற்கே பிரதமர் தனது நெறுங்கிய நண்பரை ஆளுநராக நியமித்திருந்ததாக அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.