கோலிபண்டிகை நிறுத்தப்பட்டது! பச்சைமட்டை அடி காரணமா?(படங்கள்) - THAMILKINGDOM கோலிபண்டிகை நிறுத்தப்பட்டது! பச்சைமட்டை அடி காரணமா?(படங்கள்) - THAMILKINGDOM

 • Latest News

  கோலிபண்டிகை நிறுத்தப்பட்டது! பச்சைமட்டை அடி காரணமா?(படங்கள்)


  எதிர்வரும் மாவீரர் நாளில் யாழ்ப்பாணத்தில்
  நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட வட இந்தியர்களின் கோலிப்பண்டிகை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

  மேற்படி பண்டிகை தொடர்பாக கொழும்பிலுள்ள சில அரசியல் பின்னணிகளுடன் அதனை நடாத்துவதற்கு முன்னின்று செயற்பட்ட நபருக்கு இந்த நிகழ்வு மது கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது என்பதோடு இதனை மாவீரர் நினைவு மாதத்தில் நடாத்துவதற்கு தமிழ் ஆர்வலர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
  கோப்புகாட்சி

  அதற்கு அவர்கள் செவிசாய்க்காத நிலை தொடர்ந்தும் நீடித்த நிலையில் சம்பந்தபட்ட நபருக்கு அவருக்குரிய முறையில் புரியும்படியாக பச்சைமட்டை அடி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதையடுத்து அவர் தனது விளம்பரப்பக்கத்தில் அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டதாக அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் தமிழ்கிங்டொத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இருந்தும் மேலதிக தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை ஆனால் நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  இந்த பேரின கலாச்சார அழிப்பு தொடர்பில் இருதினங்களுக்கு முன்னர் எமது இணையத்தளத்திலும் இந்த கலாச்சார அழிப்பு தொடர்பில் விரிவாக பதிவேற்றியிருந்தோம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

  இதேவேளை ஒருங்கமைப்பாளரான திரு தீசன் அமிர்தலிங்கம் அவர்களையும்  ஒருவர் முகநூலில் வண்மையாக கண்டித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


  தொடர்புடைய முன்னைய செய்தி

  மாவீரர் நாளில் யாழில் “கண்ணனின் லீலைகள்“-கூத்து பண்டிகை(ஆதாரம் இணைப்பு)


  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கோலிபண்டிகை நிறுத்தப்பட்டது! பச்சைமட்டை அடி காரணமா?(படங்கள்) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top