அம்பலமாகியது மாவையின் வசந்த மாளிகை(படங்கள்) - THAMILKINGDOM அம்பலமாகியது மாவையின் வசந்த மாளிகை(படங்கள்) - THAMILKINGDOM

 • Latest News

  அம்பலமாகியது மாவையின் வசந்த மாளிகை(படங்கள்)

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில்
  ஒருவரும் தமிழரசு கட்சி தலைவருமான மாவை சேனாதிராசா அவர்களால் வலிகாமத்தில் அமைக்கப்பட்டுவரும் வீடு தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  ஏற்கனவே இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வீடு தொடர்பான செய்தியை கடந்தவருடம் வெளியிட்டிருந்தோம் தற்போது அண்மையில் அமைக்கப்பட்டுவரும் வீடு தொடர்பான விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

  மிகவும் ஆடம்பரமானமுறையில் அமைக்கப்பட்டுவரும் வீட்டின் மதில்கூட கருங்கற்களைகொண்டு கட்டப்பட்டுவருவதும் வாயிலிலிருந்து கார்செய்வதற்கான விசேட பாதை அமைப்புக்களும் அமைக்கப்பட்டுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

  இதேவேளை அண்மையில் சம்பந்தன் ஐயா ஒரு அறையில் வசித்துவருவதாக த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில் அதனை திருத்துவதற்காக 2.5 கோடிரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  பாராளுமன்றத்தில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவால் குறித்த பிரேரணை சபையில் முன்வைத்து அனுமதி கோரியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்த மக்கள் வலிகாமம் பகுதியில் இன்னமும் மீள்குடியேற்றப்படாமல் இருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  தொடர்புடைய முன்னைய செய்தி

  ஐயாவுக்கு ஏற்கனவே பதிவின்படியே நான்கு வீடுகள் இருக்குது அதில ஐயா இருக்காம ,இன்னொரு சின்னவீட்டில இருந்தநேரம் பிள்ளையான் விசயம் தெரியாம போயிருக்கிறார் என நினைக்கிறன். உடன கேப்பியள் எங்க அந்த நாலு வீடுமெண்டு கேப்பியள் அதுகும் சொல்லுறன் கவலைப்படாதையுங்கோ.
  பாவம் சம்பந்தன் ஐயாவுக்கு வீடே இல்லை அவர் காமராஜர்மாதிரி எண்டு எங்கட 5பேருக்கு பேச்சாளரான சுமந்திரன் சொன்னவரெல்லோ அத கனபேர் காவித்திரியினம் ஐயா சுத்த சைவம் எல்லாத்தையும் துறந்து ஒரு சின்ன கொட்டில்லதான் இருக்கிறார் பிள்ளையான் வந்து ஐயான்ர வீட்டை காணேல்ல எண்டு தேடினதாகவும் ஒரு கதை விட்டிருந்தவர்.

  சிலபேர் அத நினைச்சு கவலையாம் பாவம் ஐயா எங்களுக்காக எவ்வளவ துறந்து மக்களுக்காக சேவையாற்றுறார் எண்டு அதாவ கவலைப்படுறாக்கள் கனக்க யோசிக்காம உங்கட அலுவலுகள பாருங்கோ.

  1.திருகோணமலையில இருக்கிற ஐயான்ர சொந்த வீடு இதுக்கு முன்னால அண்மையில காணாமல் போன உறவுகள் போராட்டம் நடாத்தியிருந்தனர்.

  2.20.02.1984 இல ரூபா 2.5 இலட்சம் பெறுமதியுடைய வீடு தமிழக வீட்டுவசதி வாரியத்தலைவர் செல்லையாத் தேவரால் வழங்கப்பட்டது.

  3.1994 ஆம் ஆண்டு கொழும்பு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அப்போதைய அரச தலைவர் சந்திரிக்காவால் இன்னொரு வீடு வழங்கப்பட்டிருந்தது அதிலேயே தற்போதும் வசித்து வருவதாக சொல்லப்படுகின்றது.

  4.தற்போது கொழும்பு 7ல் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் வீடு தற்போது உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது

  மேலும் சம்பூரில் மக்களுடைய காணிகளை சம்பந்தன் வைத்திருப்பதாக 2012ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற கூட்டமைப்பின் கூட்டத்தில் ஒருவர் சம்பந்தனிடம் நேரடியாக கேட்ட ஆதாரம் உண்டு. மேலும் 4வீட்டிலும் தற்போது யார் யார் இருக்கிறார்கள் எனக்கேட்கப்படாது.

  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அம்பலமாகியது மாவையின் வசந்த மாளிகை(படங்கள்) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top