Breaking News

மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள்! – பிரதமர் மோடி உறுதி



இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

ஹட்டன் – நோர்வூட் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்துகையில், ஆயிரக்கணக்கான மலையக மக்களுக்கு முன்னிலையில் இந்திய பிரதமர் இவ் வாக்குறுதியை வழங்கியுள்ளார்.