Breaking News

சம்பந்தன் என்னுடன் பேசுவதற்கு தயங்குவதேன்?-மனோ கேள்வி

யுத்த காலத்தில் தலை­ந­கரில் தமிழ்
மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­காக தைரி­ய­மாக குரல் கொடுத்த அர­சி­யல்­வா­தி­யான மனோ கணேசன் இன்று நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அமைச்­ச­ராக பணி­பு­ரி­கின்றார். அன்று காணாமல் போன அல்­லது கடத்தல் சம்­பவம் இடம்­பெற்றால் பொலிஸ் நிலை­யத்தில் முறை­யி­டு­வ­தற்கு முன்னர் இவ­ரி­டமே கூறும் வழக்கம் இருந்­தது. வீதி­களில் இறங்கி போரா­டி­யவர். காணாமல் போதல், கடத்­தல்கள் என்­ப­ன­வற்­றுக்கு எதி­ரா­கக்­குரல் கொடுத்­த­மையின் கார­ண­மாக அமெ­ரிக்க அர­சாங்­கத்­தினால் சுதந்­திர காவலர் என்ற விருதும் வழங்­கப்­பட்­டவர்.

அத்­த­கைய அர­சி­யல்­வா­தியின் இன்­றைய நிலை என்ன? அவர் திருப்­தி­க­ர­மாக நல்­லாட்சி அர­சாங்­கத்தில் கட­மை­யாற்­று­கின்­றாரா? தென்­னி­லங்கை தமிழ் மக்­களின் வாழ்க்­கையில் மாற்­றத்தை இவரால் ஏற்­ப­டுத்த முடி­யுமா? வடக்கு, கிழக்கு மக்­களின் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வை பெறு­வதில் எவ்­வா­றான பங்­க­ளிப்பை அவரால் செலுத்த முடியும் போன்ற கேள்­வி­க­ளுக்கு பதில் ­அளிக்கின்றார் அமைச்சர் மனோ கணேசன்.
Q:- நீங்கள் இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக பாரிய அர்ப்­ப­ணிப்பை செய்த ஒருவர். யுத்த காலத்தில் கடத்­தல்கள், காணாமல் போதல் சம்­ப­வங்­க­ளுக்கு எதி­ராக போரா­டி­யவர். அந்த வகையில் உங்­க­ளுக்கு இந்த அர­சாங்­கத்தில் கிடைத்­துள்ள இடம் தொடர்பில் திருப்தி அடை­கின்­றீர்­களா?
A: நிச்­ச­ய­மாக திருப்­தி­யு­ட­னேயே இருக்­கின்றேன். அதில் எந்த மாற்றுக் கருத்­துக்கும் இட­மில்லை. நான் எந்தத் துறை­யில் எந்த விட­யங்­க­ளில் ஆர்­வ­மாக செயற்­பட்­டேனா, அதே துறை­யி­லேயே நான் இன்று இந்த அர­சாங்­கத்தின் சார்பில் செயற்­ப­டு­கின்றேன். இந்த நாட்டில் வாழும் இனங்கள், மதங்கள், மொழி­க­ளுக்கு மத்­தியில் ஐக்­கி­யத்­தையும் ஒற்­று­மை­யையும் சமத்­துவம் என்ற அடிப்­ப­டையில் ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பது எனது இலட்­சி­ய­மாகும். அந்தப் பணியை நான் தற்­போது அமைச்­ச­ரவை அதி­கா­ரத்­துடன் செய்து கொண்­டி­ருக்­கின்றேன்.
ஒன்றை நீங்கள் மறந்­து­விட வேண்டாம். நான் இந்த 2015 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்கு முன்னர் எம்.பி.யாக இருக்­க­வில்லை.
2010 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கண்­டியில் போட்­டி­யிட்­ட­போது வெற்­றி­பெற முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்டேன். அதில் நான் தோல்­வி­ய­டைந்­த­தாக கூற முடி­யாது. எனினும் வெற்­றி­பெற முடி­ய­வில்லை. அதன் பின்னர் மாகாண சபை உறுப்­பி­ன­ரா­கவே இருந்தேன். அந்த வகையில் இலங்கை வர­லாற்றில் மாகாண சபை­யி­லி­ருந்து அமைச்­ச­ர­வைக்கு சென்ற ஒரே­யொரு அர­சி­யல்­வாதி நான்தான். எனவே சாத­க­மான விட­யங்­களை பார்க்க வேண்டும். பாத­க­மான விட­யங்­க­ளையும் பார்க்க வேண்டும்.
Q:- அப்­ப­டி­யெனில் பாத­க­மான விட­யங்கள் உள்­ள­னவா?
A: இல்லை. உங்கள் கேள்­வியில் பாத­க­மான விஷ­யத்தை தேடும் ஒரு தொனி தென்­பட்­டது. அதை தான் கூறினேன்.
Q:- மனோ கணேசன் இந்த அர­சாங்­கத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்­ப­தற்­கான நியா­ய­மான கார­ணங்­களை கூற முடி­யுமா?
A: ஒப்­பிட்­ட­ளவில் கடந்த ஆட்­சி­யை­விட இந்த ஆட்சி நன்­றாக இருக்­கின்­றது என்றே கூறுவேன். கடந்த ஆட்­சியை காட்­டாட்சி என்று வர்­ணிக்­கின்றோம். இந்த ஆட்­சியை நல்­லாட்சி என்று வர்­ணிக்­கின்றேன். நல்­லாட்சி என்றால் அதி­சி­றந்த நல்­லாட்சி என்று அர்த்தமல்ல. உல­கத்தில் அதி சிறந்­தது என்று எதுவும் கிடை­யாது. ஒப்­பிட்­டுத்தான் பார்க்க வேண்டும். அன்­றை­யதை விட இன்று நன்­றாக இருக்­கின்­றது. இன்­றை­யதை விட நாளைய ஆட்சி நன்­றாக இருக்­கலாம். அல்­லது மோச­மா­கவும் போகலாம். ஒப்­பீட்டு ரீதி­யி­லேயே நாம் இவற்றை நோக்­க­வேண்டும். அதனால் நான் இந்த அர­சாங்­கத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என நினைக்­கிறேன்.
Q:- நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்­பான உங்­க­ளது சுய மதிப்­பீடு என்ன?
A: இன்று சட்­டத்தின் ஆட்சி நில­வு­கின்­றது. பொலிஸ் துறையில் ஒரு சுயா­தீனம் தெரி­கி­றது. நீதித்­து­றையில் சுயா­தீனம் உள்­ளது. கடந்த ஆட்­சியில் இருந்த நிலை­மை­களை ஒப்­பிட்டு பார்க்­கும்­போது நிலைமை முன்­னேறி உள்­ளது. இங்கு ஒப்­பி­டுதல் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கி­றது. உதா­ர­ண­மாக அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னை­களை எடுத்து பாருங்கள். நாங்கள் பத­விக்கு வரும்­போது சுமார் 200 அர­சியல் கைதிகள் இருந்­தனர். ஆனால் இன்று சுமார் 100 பேர் வரை உள்­ளனர். ஏனையோர் ஏதோ­வொரு வழியில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். யுத்த காலத்தில் மக்­க­ளிடம் இருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. முழு­மை­யாக வழங்­கப்­பட்டு விட்­டன என்று கூற முடி­யாது. ஆனால் கணி­ச­மான தனியார் காணிகள் விடு­விக்­கப்­பட்டுக் கொண்டு தான் இருக்­கின்­றன. அண்­மையில் கூட மயி­லிட்டி துறை­முக பகு­தியை விடு­விக்­கப்­பட்­டது. இந்த விடயத்தில் இன்னும் செல்ல வேண்­டிய தூரம் அதிகம் உள்­ளது. காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­லகம் அமைக்கும் நோக்கில் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. மறு­புறம் பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தியில் இனப்­பி­ரச்­சி­னையை தீர்க்கும் நோக்கில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் இடம்­பெ­று­கின்­றன. இந்த துறையில் நான் என்னை நேர­டி­யாக ஈடு­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்றேன்.
Q:- இவற்றைக் கொண்டு உங்­களால் திருப்­தி­ய­டைய முடி­யுமா?
A: நான் எப்­போதும், எந்த விஷ­யத்­திலும் இலேசில் திருப்­தி­ய­டைய மாட்டேன். எனது அர­சியல் வாழ்வில் நான் ஒரு­போதும் திருப்தி அடை­வ­தில்லை. இங்­கேயும் கவ­னி­யுங்கள், ஒப்­பி­டு­த­லையே நான் செய்­கிறேன். நான் நினைத்­தி­ருந்தால் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அரசில் 2005 யிலேயே இணைந்­தி­ருக்­கலாம். 2010ல் ஒரு தேசிய பட்­டி­யலை வாங்­கிக்­கொண்டு இணைந்­தி­ருக்க்லாம். நல்ல விலைக்கு போயி­ருப்பேன். (சிரிக்­கிறார்).
ஆனால் மகிந்த அரசில் தமிழ் மக்கள் ஒப்­பிட்டுப் பார்ப்­ப­தற்­கான எந்­த­வொரு நியா­ய­மான கார­ணங்­களும் இருக்­க­வில்லை. அதனால் வெளி­யி­லி­ருந்து போரா­டினேன். தற்­போது உள்ளே இருந்து போரா­டு­கின்றேன்.
Q:- தொடர்ந்து போராட்­டம்தானா?
A: ஆம். அதனை மறுப்­ப­தற்­கில்லை. எப்­போதும் நான் ஒரு போரா­ளிதான். என் ஆயுதம் ஜன­நா­யகம். போராட்டம் எனக்கு எப்­போதும் மகிழ்ச்­சியை தரு­கி­றது. காரணம் எனது போராட்­டங்கள் நியா­யத்தை நோக்­கி­ய­தா­கவே இருக்­கின்­றன.
Q:- எதிர்க்­கட்­சியில் இருந்து போரா­டு­வதும், ஆளும் கட்­சி­யி­லி­ருந்து உள்­ளக ரீதியில் போரா­டு­வதும் எவ்­வாறு இருக்­கின்­றது?
A: எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்து போராடும் போது அது பளிச்­சென தெரி­கி­றது. மக்­க­ளையும் சென்­ற­டை­கி­றது. ஆனால் ஆளும் கட்­ச­ியி­லி­ருந்து போரா­டும்­போது அது அவ்­வ­ள­வாக தெரி­யாமல் போய்­விடும். ஆனால், இந்த “தெரி­கி­றது..,தெரி­யா­ம­லி­ருக்­கி­றது” என்­ப­வை­க­ளை­பற்றி நான் அவ்­வ­ள­வாக அலட்­டி­கொள்­வ­தில்லை. என்மேல் மக்­க­ளுக்கு நம்­பிக்கை இருக்­கி­றது. அத­னால்தான் நான் எங்­கி­ருந்து போரா­டி­னாலும், மனோ கணேசன் சரி­யான திசை­யைதான் நோக்கி நகர்­கின்றார் என மக்கள் நம்­பு­கின்­றனர்.
Q:- ஜன­நா­யகம் குறித்து பேசி ஆட்­சிக்கு வந்த இந்த அர­சாங்கம் ஜன­நா­ய­கத்தின் முக்­கிய அம்­ச­மான தேர்­தலை நடத்­தாமல் இருக்­கி­றது. இதற்கு எவ்­வாறு பதி­ல­ளிக்கப் போகின்­றீர்கள்?
A: ஒரு விட­யத்தை முதன்­மு­த­லாக உங்கள் நாளேடு மூல­மாக நாட்­டுக்கு அறி­விக்­க­வேண்டும். நவம்பர் மாதம் இறுதி வாரத்­திலே நாடு முழு­வதும் உள்­ளூ­ராட்சி தேர்தல் நடை­பெறும். அதற்­கான முடிவு சில தினங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற கட்சிக் தலை­வர்கள் கூட்­டத்தில் எடுக்­கப்­பட்டு விட்­டது.
இந்த தேர்தல் தாமதம் அடைந்­த­மைக்கு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் சட்­ட­ மூலத்தில் இருக்­கக்­கூ­டிய குள­று­ப­டி­களே பிர­தான கார­ண­மாகும். அந்தக் குள­று­ப­டி­களை கடந்த அர­சாங்­கத்தின் சக்தி வாய்ந்த அமைச்­ச­ரான பஷில் ராஜ­ப­க் ஷவே உரு­வாக்­கினார்.
அதில் குறிப்­பாக சிறிய மற்றும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கு அப்­பட்­ட­மான அநீதி இழைக்­கப்­பட்­டி­ருந்­தது. மிக மோச­மான முறையில் தொகுதி வட்­டார எல்­லைகள் நிர்­ணயம் செய்­யப்­பட்­டி­ருந்­தன. எனவே சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கு தமது பிர­தி­நி­தித்­து­வங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­படும் வகையில் திருத்­தங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கா­கதான் இந்த தாமதம் நில­வு­கின்­றது. எங்­க­ளது அந்த இடை­வி­டாத உள்­ளகப் போராட்­டத்தின் கார­ண­மாக சட்­டத்தின் குள­று­ப­டி­களும், எல்லை நிர்­ணய குள­று­ப­டி­களும் மிக பெரும்­பாலும் சீர்­செய்­யப்­பட்­டுள்­ளன.
Q:- அப்­ப­டி­யாயின் வரப்­போகும் உள்­ளூ­ராட்சி தேர்தல் முறையில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு அநீதி இருக்­காதா?
A: பஷில் ராஜ­பக் ஷ ஏற்­பாடு செய்த அந்த சட்­ட ­மூ­லத்தில் இருந்த குள­று­ப­டிகள் உடைத்­தெ­றி­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. அவற்றை நாங்கள் இன்று பேசி முடித்­து­விட்டோம். எமது முடி­வு­க­ளின்­படி சட்­ட­மூல திருத்­தங்கள் சட்­ட­மா­தி­பரால் தயா­ரிக்­கப்­பட்டு அடுத்­த­வாரம் அமைச்­ச­ர­வைக்கு வழங்­கப்­படும். அமைச்­ச­ரவை அதனை ஏற்று பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்கும்.
Q:- தற்­போ­தைய அர­சாங்கம் 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்­காது என மஹிந்த அணி­யினர் கூறி வரு­கின்­றனர். இதற்கு என்ன பதில்?
A: நீடிக்­காது என்­பது மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கனவு. அது அவ­ரது ஆசை. அவ­ரது பேராசை என்றும் கூறலாம். ஆனால் அர­சாங்கம் எந்த சிக்­க­லு­மின்றி நீடிக்கும். ஏனெனில் ஒன்றாய் இருக்­கும்­வ­ரைதான் வாழ்வு என்று இங்கே உள்­ள­வர்­க­ளுக்கு நன்கு தெரியும்.
Q:- அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. அதில் தமிழ் பேசும் மக்­களை பொறுத்­த­வ­ரையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வே முக்­கி­யத்­து­வம்­மிக்­கது. இதில் தற்­போது என்ன நடக்­கின்­றது என்ற உண்­மையை நாட்டு மக்­க­ளுக்கு கூற வேண்­டிய பொறுப்பு உங்­க­ளுக்கு இருக்­கின்­றது. தயவு செய்து உண்­மையை கூறுங்கள்...?
A: அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணியில் அர­சாங்கம் மட்டும் ஈடு­ப­ட­வில்லை. மாறாக இன்று முழு நாடும் அதில் ஈடு­ப­ட்டுள்ளது. முழுப் பாரா­ளு­மன்­றமும் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்டு பிர­தான வழி­ந­டத்தல் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அந்தக் குழுவின் தலை­வ­ராக பிர­தமர் இருக்­கிறார். அந்த 21 பேர் கொண்ட குழுவில் ஆளும் கட்சி, எதிர்க்­கட்சி என அனைத்து தரப்­பி­னரும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.
சம்­பந்தன், அநு­ர­கு­மார, டக்ளஸ் தேவா­னந்தா, தினேஷ் குண­வர்த்­தன ஆகிய எதி­ரணி தலை­வர்­களும், ஹக்கீம், ரிசாத், சம்­பிக்க ரண­வக்க, நிமால் சிறி­பால டி சில்வா, மனோ கணேசன் என்ற ஆளும் அணி கட்சி தலை­வர்­களும் உள்­ளனர்.
1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ கொண்டு வந்த அர­சி­ல­ய­மைப்பு உரு­வாக்­கத்­திலும், 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். கொண்டு வந்த அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திலும் காணப்­ப­டாத பண்பு இம்­முறை உரு­வாக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கி­றது. ஜன­நா­யக பாரம்­ப­ரிய முறைமை பின்­பற்­றப்­ப­டு­கி­றது. சிறி­மாவின் காலத்தில் சமை­ய­லறை அமைச்­ச­ர­வையை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வந்தார். ஜே.ஆர். தனது நண்­பர்­களை வைத்துக் கொண்டே அர­சி­ய­ல­மைப்­பனை கொண்டு வந்தார்.
இன்று அப்­ப­டி­யல்ல. ஜன­நா­ய­க­ரீ­தி­யாக முழு நாட்டு மக்­க­ளி­னதும் கருத்­துக்கள் பெறப்­பட்டு அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. தற்­போது எமது வழி­ந­டத்தல் குழு­வுக்கு வந்த யோச­னை­களை எல்லாம் தொகுத்துக் கொண்­டி­ருக்­கின்றோம். வழி­ந­டத்தல் குழு­வுக்கு முடி­வுகள் எடுக்கும் அதி­கா­ரங்கள் இல்லை. ஆனால் வந்த யோச­னை­களை தொகுத்து அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபைக்கு கொடுப்போம். அங்­கேதான் இறு­தி­மு­டிவு எடுக்­கப்­படும்.
Q:- அர­சியல் தீர்வு தொடர்பில் எவ்­வா­றான நிலைமை காணப்­ப­டு­கி­றது.
A: இலங்கை தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக நான் ஒரு விட­யத்தை கூறி விட வேண்டும். தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின், மனோ ­க­ணே­சனின் இது தொடர்­பான நிலைப்­பா­டுகள் மிகவும் தெளி­வா­னவை. அதா­வது வடக்கு, கிழக்கு இணைக்­கப்­பட வேண்டும். இதற்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மற்றும் சிங்­கள மக்­களின் உடன்­பாடு பெறப்­பட வேண்டும். சமஷ்டி முறை­மை­யி­லான, மத­சார்­பற்ற அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும். 13 ஆவது திருத்­தத்தை தாண்­டிய அதி­காரப் பகிர்வு இருக்க வேண்டும்.
தேர்தல் முறை­யா­னது சிறு­பான்மை மக்கள் இன்று பெற்றுக் கொண்­டி­ருக்கும் பிர­தி­நி­தித்­து­வங்கள் சற்றும் குறை­யாமல் அதனை இன்னும் வலு­வாக்கும் வகையில் அமைய வேண்டும். ஜனா­தி­பதி முறைமை முழு­மை­யாக நீக்­கப்­ப­டு­வதில் எமக்கு உடன்­பாடு இல்லை. அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்ட ஆனால் மக்­க­ளினால் நேர­டி­யாக தெரிவு செய்­யப்­ப­டக்­கூ­டிய ஜனா­தி­ப­தி­யொ­ருவர் இருக்க வேண்டும். அது ஆறு அல்­லது ஐந்து வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை சிறு­பான்மை மக்­க­ளுக்கு வாக்­கு­ப­லத்­தி­னூ­டாக பேரம் பேசும் சக்­தியை கொடுக்கும்.
அதே­நேரம் சிறு­பான்மை இனத்தை சார்ந்த ஒருவர் உப ஜனா­தி­ப­தி­யா­கவும் நிய­மிக்­கப்­பட வேண்டும். இதுதான் எமது நிலைப்­பாடு. இது எனது தெளிவான நிலைப்­பாடு என்­ப­தனை தெரி­விக்­கின்றேன். இதில் சில விட­யங்­களை வழி­ந­டத்தல் குழு­வுக்கு முன்­வைத்­துள்ளோம். சில விட­யங்­களை முன்­வைக்­க­வில்லை.
காரணம் வழி­ந­டத்தல் குழுவில் ஒரு யதார்த்தம் இருக்­கின்­றது. அந்த யதார்த்தம் என்­ன­வெனில் தற்­போது வடக்கு, கிழக்கு இணைப்­பிற்கு சாத்­தியம் கிடை­யாது. சமஷ்­டிக்கு சாத்­தி­ய­மில்லை. மத­சார்­பின்மை என்ற கொள்­கைக்கு சாத்­தியம் கிடை­யாது. இந்த யதார்த்­தத்­திற்கும், எமது எதிர்­பார்ப்­புக்கும் இடையில் பாரிய இடை­வெளி காணப்­ப­டு­கி­றது. இந்த உண்­மை­யைதான் நான் உரத்து கூறு­கின்றேன். இந்த யதார்த்­தத்தை தமிழ் மக்­க­ளுக்கு தெளி­வாக எடுத்து சொல்ல வேண்­டிய கடமை எனக்கு இருக்­கி­றது. சொன்­னால்தான் தமிழ் மக்கள் உண்­மையை தெரிந்து கொள்­வார்கள்.
உங்கள் கேள்­வியில் மக்­களின் எதிர்­பார்ப்பு தொக்கி நிற்­கி­றது. இது நியா­ய­மான கேள்­விதான். மக்கள் எழுப்பும் கேள்­வியை நீங்கள் என்­னிடம் கேட்­கின்­றீர்கள். அத­னால்தான் மக்கள் தெளி­வில்லாமல் இருக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக உண்­மையை கூறு­கின்றேன். அர­சி­ய­ல­மைப்பு இன்னும் வர­வில்லை. அது வருமா, வராதா என்ற சந்­தேகம் கூட ஏற்­பட்­டு­விட்­டது. எனினும் இன்­றைய யதார்த்­தத்தை மக்­க­ளுக்கு எடுத்துக் கூறு­வதில் தயக்கம் இருக்­கக்­கூ­டாது.
காரணம் இந்த முறைதான் நாடு முழுக்க சென்று மக்கள் கருத்­து­களை பெற்­றுளோம். இந்த முறைதான் இந்த அர­சி­ய­ல­மைப்பு செயற்­பாட்டில் மக்­களின் பங்­க­ளிப்பு அதி­க­மா­க­வுள்­ளது என்று உரக்க கூறி நாம் தம்­பட்டம் அடித்துக் கொண்­டி­ருக்­கின்றோம். அந்த தம்­பட்டம், ஏன் தற்­போது, மக்­க­ளிடம் உள்ளே இருக்கும் உண்­மையை எடுத்து கூறு­வதில், என்னை தவிர, ஏனை­யோ­ரிடம் நின்று போய்­விட்­டது என்று தெரி­ய­வில்லை.
திங்கட்கிழமை தொடரும்...(நன்றி  வீரகேசரி)