Breaking News

ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

தமிழரசுக்கட்சியின் கோரிக்கையினை
ஏற்றுக்கொள்ளமுடியாது
என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் இன்று தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்தியுள்ளதார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கூவத்தூர் விடுதியில் சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சி பாராளுமன்ற ,மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையேயான கலந்துரையாடலுக்கு அமைய முதலமைச்சருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்ற முடிவிற்கமைய தமிழரசுகட்சி சார்பில் ஏகமனதாக ஆனல்டை தெரிவு செய்துள்ளோம் என முதலமைச்சருக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில் அதற்கான பதிலையே முதலமைச்சர் இன்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழ்கிங்டொத்தின் செய்திப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நிர்வாக அனுபவமும் கல்வி தகமையையும் கொண்ட அனுபவம் வாய்ந்த மூத்தவர்கள் பலர் வடமாகாணசபையில் இருப்பதால் பொருத்தமான இன்னொருவருக்குதான் கல்வி அமைச்சு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் இது தொடர்பாக தான் ஆராய்து வருவதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஏற்கனவே தமிழரசுக்கட்சிக்கு சார்பான இரு அமைச்சர்கள் உள்ள நிலையில் வெற்றிடமாக உள்ள மற்றைய ஒரு அமைச்சை தமது சொற்படி நடக்க கூடிய ஒருவரை நியமிப்பதன் ஊடாக முதலமைச்சர் அமைச்சுவாரிய முடிவெதனையும் எடுக்கமுடியாதபடி சிக்கலுக்குள் தள்ளும் நோக்குடன் மிகவும் அனுபவமும் கல்வியறிவும் உடைய ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர் அரியரட்னம் இருக்ககூடியதாக அவரை தவிர்த்து சுமந்திரனின் குழப்ப அணியில் சிறப்பு சேர்ச்சிபெற்ற ஆனெல்டை தமிழரசுக்கட்சி சிபார்சு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய முன்னைய காணொளிகள்




தொடர்புடைய முன்னைய செய்திகள்

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)

முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)






முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்