மதுபானங்களின் விலை அதிகரிப்பு! - THAMILKINGDOM மதுபானங்களின் விலை அதிகரிப்பு! - THAMILKINGDOM

 • Latest News

  மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

   


  மதுபானத்தின் விலையும் நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

  இதன்படி, அனைத்து வகை மதுபானங்களின் விலையை DCSL உயர்த்தியுள்ளதுடன், 750 ml விசேட மதுபான போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

  இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்ப ஏனைய மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  இதேவேளை, இரண்டு வகையான சிகரெட்டுகளின் விலையை நேற்று நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

  ஏனைய புகையிலை பொருட்களின் விலைகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

  இதன்படி சிகரட் ஒன்றின் புதிய விலை 90 ரூபாவாகும்.

  ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரி இந்த விலை உயர்வுக்கு வழிவகுத்தது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மதுபானங்களின் விலை அதிகரிப்பு! Rating: 5 Reviewed By: news
  Scroll to Top