ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதற்கு தயங்கப் போவதில்லை: ராதிகா சிற்சபேசன்
ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதற்கு தான் என்றும் தயங்கப் போவதில்லை என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் ஈழத்தமிழர்கள் எனது உறவினர்கள், சகோதர, சகோதரிகள். யார் என்ன சொன்னாலும் நான் அவர்களிற்காக குரல் கொடுப்பதற்கு என்றுமே தயங்கப் போவதில்லை.
எனது நடவடிக்கைகளைக் கண்டித்த அரச தரப்பை நான் எள்ளளவும் கருத்தில் எடுக்கவில்லை. ஒக்டோபர் மாதம் இடம்பெறும் கனடியத் தேர்தலில் எங்களது கட்சியே ஆட்சியமைக்கும் என்பதை கருத்துக்கணிப்புக்கள் காட்டுகின்றன. அத்துடன் தேர்தலுக்கான நடவடிக்கைகளில் தமது கட்சி சிறப்பாக செயற்பட்டு வருவதன் காரணமாக பொதுமக்கள் தம்மை பின்தொடருவர் எனவும் தேர்தலின் மூலம் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தாம் முனைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஸ்டிபன் ஹாப்பர் அரசில் கனேடிய அரசில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ள ராதிகா சிற்சபேசன் அம்மாற்றங்களை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.