அப்துல்கலாமின் இறுதிச் சடங்குகள் ராமேஸ்வரத்தில் நாளை நடைபெறும்
நேற்றையதினம்(27) காலமான இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இறுதிச் சடங்குகளை அவர் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடத்த அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதனால்
நாளை புதன்கிழமை(29) இறுதி ஊர்வலம் நடைபெற்று பூரண ராணுவ, அரச மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் மூத்த விஞ்ஞானியுமான அப்துல்கலாம் நேற்று மாலை மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.