மைத்திரி யுகம் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவு
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 6 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓராண்டு நிறைவு இன்றாகும். இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள தேசிய நிகழ்வுகள் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வுக்கு பிரதான சிறப்பு விருந்தினராக இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் சிருஷ்ண காந்தியும் கலந்துகொள்ளவுள்ளார்.
இன்றைய நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இரு விசேட உரைகளை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.