போர்க்குற்றச்சாட்டில் இருந்து இராணுவத்தினரை அரசு விடுவிக்கும் – ஜனாதிபதி உறுதி
போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தினரை விடுவிப்பதற்கு, தமது அரசாங்கம் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி ஒன்றில், எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் அரசாங்கம் ஜனநாயகம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, தம்மைக் கொலை செய்வதற்கு, விடுதலைப் புலிகள் ஐந்து தடவைகள் முயற்சித்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்