Breaking News

சர்ச்சைக்குள் சிக்க விரும்பவில்லை - முதலமைச்சர்

சர்ச்சைக்குரிய வீட்டை பார்வையிட்டு சர்ச்சைக்குள் அகப்பட விரும்பவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை வடமாகாண முதலமைச்சர் சி,வி.விக்னேஸ்வரன் நேற்று (வியாழக்கிழமை) மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன்போது வலி.வடக்கு வீமன்காமம் பகுதியில் இராணுவ வதை முகாம் என சந்தேகிக்கும் இரு வீடுகளை பார்வையிட வருமாறு முதலமைச்சரை மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் கோரியுள்ளார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த முதலமைச்சர், ஊடகவியலாளர்களை சுட்டிக்காட்டி, ‘இவர்கள் இருக்கும் போது நான் அதனை சென்று பார்வையிட்டால் சர்ச்சைக்கு உரிய வீடுகளை பார்வையிட்ட வடமாகாண முதலமைச்சர் என செய்தியை வெளியிட்டு மேலும் சர்ச்சையை கிளப்பி விடுவார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஊடகவியலாளர்கள் அற்ற வேளையில் அதனை சென்று பார்வையிடுவோம் எனவும் முதலமைச்சர் ஊடகவியலாளர்களை பார்த்து புன்னகைத்த படியே குறிப்பிட்டுள்ளார்.