நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதுவும் தெரியாது - வடக்கு முதல்வர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கம் கட்சி ஒன்றினால் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமக்கு எந்தவொரு தகவல்களும் தெரியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் பயிலுனர் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை தேசியக் கல்வியல் கல்லுாரியில் இடம்பெற்றது.
இதன்போது வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அத்துடன் தமக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தாம் அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரும் முயற்சிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்று முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ். ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.