Breaking News

யுத்தம் பற்றிய உண்மைகளை கண்டறிவது மிகவும் முக்கியமானது – சந்திரிக்கா

யுத்தம் பற்றிய உண்மைகளை கண்டறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை நோக்கி முன் நகர வேண்டுமாயின் யுத்தம் பற்றிய பின்னணி மற்றும் அது குறித்த ஏதுக்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச உண்மை அறியும் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.உண்மையை கண்டறியும் பொறிமுறைமையை சீர்குலைப்பதற்கு சில அரசியல் தலைமைகள் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னரும் யுத்தத்தின் போதும் சில அரசியல் தரப்புக்கள் மக்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்தவே முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக உறவுகளைப் பிரிந்தவர்கள் காணாமல் போனவர்கள் வடக்கு கிழக்கில் மட்டும் இல்லை எனவும் தெற்கிலும் இருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் உண்மையைக் கண்டறிவது தொடர்பிலான பொறிமுறைமையை உருவாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் வெறுமனே ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.