விமானக் கடத்தல் விவகாரம் முடிவுக்கு வந்தது- கடத்தியவர் இவர்தான்? - THAMILKINGDOM விமானக் கடத்தல் விவகாரம் முடிவுக்கு வந்தது- கடத்தியவர் இவர்தான்? - THAMILKINGDOM

 • Latest News

  விமானக் கடத்தல் விவகாரம் முடிவுக்கு வந்தது- கடத்தியவர் இவர்தான்?

  அலெக்ஸாண்ட்ராவிலிருந்து கெய்ரோ சென்றுகொண்டிருந்த
  அந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குண்டுகள் நிரம்பிய இடுப்புப்பட்டி ஒன்றைத் தான் அணிந்திருந்ததாகக் கூறி விமானத்தை கடத்தினார்.
  இதையடுத்து அந்த விமானம் சைப்ரஸிலுள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

  தற்போது சைப்ரஸில் தஞ்சம்கோரியுள்ள அந்த நபர், அந்நட்டைச் சேர்ந்த தனது முன்னாள் மனைவியைக் காணவேண்டும் எனக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்தக் கடத்தல் பயங்கரவாதம் தொடர்புடையது அல்ல, ஒரு பெண் சம்பந்தப்பட்டது என சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  லார்னகா விமானநிலையத்தில் ஒரு பதற்றமான நெருக்கடி நிலைக்குப் பின்னர் , விமானத்தைக் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

  தனது கைகளைத் தூக்கியபடி விமானத்திலிருந்து வெளியே வந்த அவர், பின்னர் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளிடம் சரணடைந்தார்.
  அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக , பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விமானத்தின் படிகளில் ஒடி இறங்கி தப்பிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.

  அலெக்ஸாண்டிரியாவிலிருந்து கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த இந்த ஈஜிப்ட் ஏர் விமானம், தற்கொலை குண்டு பொருத்தப்பட்டிருந்த அங்கி ஒன்றை அணிந்திருந்ததாகக் கூறிக்கொண்ட ஒருவரால் சைப்ரஸுக்குக் கடத்திச் செல்லப்பட்டது.


  முன்னைய செய்திகள்

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: விமானக் கடத்தல் விவகாரம் முடிவுக்கு வந்தது- கடத்தியவர் இவர்தான்? Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top