Breaking News

கச்சத்தீவை மீளப் பெற்றுக்கொள்ள நேரிடும் ஜெயலலிதா எச்சரிக்கை



கச்சத்தீவை மீளப் பெற்றுக்கொள்ள நேரிடும் என தமிழக முதல்வர் ஜெயலலிதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்களின் மரபு ரீதியான மீன்பிடி உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டால் கச்சத்தீவை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அருப்புக்கோட்டை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கப்பட்டமையே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். மீனவர்கள் கைது செய்யப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாம் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.