Breaking News

முருகனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தாயார் சம்பந்தனிடம் மகஜர்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்ட முருகனின் தாயார் வெற்றிவேல் சோமணி எதிர்கட்சி தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை இரா.சம்பந்தன் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டநிலையில் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.தனது மகன் முருகனின் விடுதலைக்கு வலியுறுத்துமாறு இரா. சம்பந்தனிடம் முருகனின் தாயார் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தநிலையில் உயர்மட்டக் குழுவினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக இதன்போது சம்பந்தன் உறுதியளித்துள்ளார்.கடந்த பெப்ரவரி மாதம் முருகனின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து சேகரிக்கும் பணியில் முருகினின் தாயார் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.