Breaking News

விக்னேஸ்வரனுக்கும், சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு

எதிர்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்த னுக்கும், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக் னேஸ்வரனிற்கும் இடையில் இன்று(சனிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கும், எதிர்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

காணி விவகாரம் தொடர்பான கூட்டமொன்றிற்கு வட மாகாண முதமைலச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சென்றிருந்தமையினால், இந்த சந்திப்பில் அவர் கலந்துக்கொள்ளவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதையடுத்தே, முதலமைச்சருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் நாளை மறுதினம் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காணி சுவீகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கிய தரப்பினர் கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.