Breaking News

வடக்கில் உள்ள சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும்: கிரியெல்ல



வடக்கு மாகாணத்தின் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பகிர்வு உட்ப வடக்கின் அனைத்து பிரச்சினைகளையும், தீர்த்து அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்க அரசு முன்னின்று செயற்படும் என அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படவுள்ளதுடன் ஆராய்ச்சி நிறுவனமும் விஸ்தரிக்கப்படவுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை வடக்கின் ஆயிரத்து 500 கிலோ மீற்றர் தூரமான வீதி நிர்மாணப்பணிகள் ஆரம்பமாகியள்ளதமாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக வடபகுதி மக்கள் பாரிய சாவால்களை மற்றும் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.



எனவே அந்த மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்கி சமூகதேவைகளை நிறைவேற்றி அடிப்படை வசதிகளை வழங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.