Breaking News

பொது மக்களின் காணிகள் முல்லையில் அபகரிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 156 ஏக்கர் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். 

கொக்குளாய் கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டு கேணி மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் சிங்கள மீனவர்களின் குடியேற்றத்திற்காக, நாயாற்றுப் பகுதியில் 150 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் பங்களா அமைத்து சிங்கள மீனவர் குடியேற்றங்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.

மேலும் சாலை பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.