Breaking News

கனடாவில் விக்கியின் இறுதிநாள் உருக்கமான உரை(காணொளி)

கனடாவில் நடைபெற்ற
இறுதிக் கூட்டத்தில் உருக்கமான உரையை ஆற்றி விட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன்.

கடந்த ஒரு வார காலமாக ஓய்வின்றி உங்கள் மத்தியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். (மிகவும் மோசமான இருமல் அவரது உணர்வுபூர்வமான உரையை தடுக்க முயலுகின்றது) அவ்வாறு உடல் இளைக்கும் வண்ணம் நான் ஓய்வின்றி ஒன்பதுநாட்கள் செயற்பட்டதால் வந்த வினைதான் இந்த இருமல்.
(நகைச்சுவையாகக் கூறுகின்றார்) எனினும் தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன் என்றார்.

இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறோவில் பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள Pan Am உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்டமான இறுதிக் கூட்டத்தில் உருக்கமான உரையை ஆற்றி விட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் வடக்கின் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


சுமார் 600 பார்வையாளர்கள் கலந்து கொண்ட மேற்படிக் கூட்டத்தில் முதல்வரது உரை தனித்துவமாக அமைந்தது. பல சவால்களை தாயகத்தில் சமாளித்த வண்ணம் அங்கு அரசியல் தலைமைத்துவத்தை ஏற்று நடத்தும் அவருக்கு இங்கு பல சவால்கள் காத்திருந்தன என்பதே உண்மை. 

இவ்வாறான பல நெருக்கடிக்களுக்கு மத்தியில் பிரம்டன் மாநகர சபை மற்றும் மார்ககம் மாநகர சபை ஆகியவற்றின் நிர்வாகத்தினரோடு பயனுள்ள ஒப்பந்தங்களை முதல்வர் செய்துள்ளமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அத்துடன் பிரம்டன் தமிழர் அமைப்பு வன்னியில் முள்ளந்தண்டு பாதிப்புற்ற முன்னாள் போராளிகளுக்காக சேகரித்த 45 ஆயிரம் டாலர்களை சேகரித்து வழங்கியிருந்தார்கள். என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை மறுபக்கத்தில் கனடாவில் இயங்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கனடிய தமிழர் காங்கிரஸ் அமைப்பும் தாயகத்திலிருந்து வடக்கு கிழ்க்கு ஆகிய பிரதேசங்களிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கபபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் அழைத்து பல நிகழ்வுகளை சம காலத்தில் நடத்தினார்கள். இந்த அழைப்புகளுக்கு பின்னால் இருந்த சூட்சுமங்களை மக்கள் அறியாமல் உள்ளார்கள். அது மிகவும் கவலைக்குரியது.

நல்ல நோக்கங்களுக்காக கனடாவிற்கு வருகை தந்த முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களோடு ஒரு பனிப்போர் நடத்தவா இங்கு வடக்கு மாகாணத்திலிருந்து கல்வி அமைச்சரையும் சுகாதார அமைச்சரையும் அழைத்திருநதார்கள் என்ற கேள்வியையே நாம் இங்கு முன் வைக்கின்றோம்.


கனடாவில் முதலமைச்சர் விகக்கினேஸ்வரன் கலந்துரையாடல்(காணொளி)

கனடா பிரம்ரன் மாநகரசபையில் முதல்வர் சிறப்புரை(காணொளி)

யார் இந்த நிர்மலன் கார்த்திகேயன் ?(காணொளி)

முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்