2016 ஆங்கிலப் புத்தாண்டுப் இராசி பலன்கள் -கும்ப இராசி - THAMILKINGDOM 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் இராசி பலன்கள் -கும்ப இராசி - THAMILKINGDOM

 • Latest News

  2016 ஆங்கிலப் புத்தாண்டுப் இராசி பலன்கள் -கும்ப இராசி

  இந்த வருடம் தொடக்கத்தில் ஆகஸ்டு மாதம்
  வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7 ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன்பிறகு 8- ம் இடத்துக்குப் போகிறார். சனி பகவான் 10-மிடத்திலும், ராகு பகவான் 7-ம் இடத்திலும், கேது உங்கள் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இனி ஒவ்வொரு கிரக சஞ்சாரமும் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம.

  ஆண்டின் தொடக்கத்தில் குருவ்ன் 7-மிட சஞ்சாரத்தின்போது, நற்பலன்களாக நிகழும். முயற்சிகள் வெற்றியடையும். மனக் குழப்பங்கள் தீரும். இல்லறம் சிறப்படையும். தொழில் சிறக்கும். கல்வி மேம்படும். .இப்போது வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தையுயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். 

  உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள். ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் . கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே.   பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று து நல்லபடியாக முடிவடையும். பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்கத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வாடர்கள். மற்றவர்கள் முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியே ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள்

  குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-மிடத்தில் சஞ்சரிப்பதால், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தையுயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள். ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் . 

  கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினைகள் தீரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். 

  நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும். எதிராக இருந்துவந்த ஊழியர்கள் அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபாரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். 

  எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனிவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.

  பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று பிரச்சினைகள் தீரும். உங்களுடைய முயற்சிகளுக்கு தந்தையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். இதுவரை தடைபட்ட திரும்ணங்கள் நடந்தேறும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் புகழடைவீர்கள். சிலர் சொந்தத் தொழிலை மேற்கொள்வர். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்கத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வாடர்கள். 

  மற்றவர்கள் முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியே ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் ஒன்று சேர்வர்.

  2016 ஆகஸ்டு மாதம் முதல் குரு உங்கள் ராசிய்க்கு 8-மிடத்தில், அஷ்டம குருவாக சஞ்சரிக்கப் போகிறார். அஷ்டம குரு, முதலில் உங்கள் தாயாரின் உடல்நலத்தைப் பாதிப்பார். வண்டி வாகனங்களாலும், கால் நடைகளாலும் கஷ்டத்தை ஏற்படுத்துவார். உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் கட்டடம் பண முடையினாலோ அல்லது எதிரிகளின் தொல்லையாலோ பாதியில் நின்றுவிடும். சிலர் தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டுக்கு குடியேறுவார்கள். 

  சிலர் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறுவார்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்லநேரும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால், உடல்நலக் குறைவு ஏற்படும். சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய பணியாக இல்லாமல் ஊர் ஊராக சென்று செய்யக்கூடிய குரு உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், குரு அஷ்டம குருவாகிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள்.

  சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களையும் , மனக் கவலையும் சூழ்ந்தபடியே இருப்பர். உங்களுக்கு நிதிநிலைமை நன்றாகவே இருந்தாலும்கூட உங்கள் பணம் எதிலாவது முடங்கிப்போவதால், பணப் பிரச்சினை உங்களை வாட்டத்தான் செய்யும். கடன்காரர்களும் லேசில் விடமாட்டார்கள். கன் தொல்லை உங்களை நாண்யமற்றவர் என்று காட்டும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். 

  சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கையில் பணப் புழக்கம் சரியாக இல்லாததால், குடும்பத்தினரின் அவசியத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் போவதால் குடும்பத்தினரின்மனக் கசப்புக்கு ஆளாக நேரும். 

  பிள்ளைகளின் படிப்புக்குக்கூட இடைஞ்சல் வரும். அவர்கள் விரும்பிய கோர்ஸில் சேர்த்துவிட முடியாமல் போகும். குடும்ப அமைதியும் கெடும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.

  பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. 

  எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம், மற்றும் கண்கலளிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.

  குரு அஷ்டமத்தில் சஞ்சரிக்கும்போது, உங்களுக்கு ‘குருபலம்’ இருக்காது. எனவே திருமணங்கள் தட்டிப் போகும். அல்லது தள்ளிப்போகும். கையில் போதிய அளவு பணம் இல்லாத காரணத்தாலும், திருமணம் செய்ய முடியாமல் போகும். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு கடுமையாகி பிரியும் நிலைகூட உருவாகும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. 

  நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். 

  பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நிங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாம்ல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சணடைதான் வரும்.

  உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள். கூட்டு வியாபாரமும் சிறக்க முடியாது.

  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறையக்கூடும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.

  தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைக்ள் ஏற்படலாம். இந்த காலம் முடிந்த நீங்கும். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு விலல்ங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக்க முடியாமல் போகும்.

  இந்த வருடம் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இந்த சமயத்தில், நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. உங்கள் பதவி, உத்தியோகத்திற்கு பங்கம் வரும். வேண்டாத இட மாற்றம் ஏற்படும். செய்வினை, பில்லி சூனியம் போன்ற பாதிப்புகளின் அச்சம் ஏறப்டும். மனப் பயம் கூடும். கவலை மிகும். கருமித்தனம் மேலிடும். காசி, ராமேஸ்வரம் என்று தல யாத்திரை செல்வீர்கள். 

  அதாவது அதிக காலம் வீட்டைவிட்டுப் பிரிந்து வாழ்வர். அதிக உழைப்பும் ,குறைந்த வருவாயும் உள்ள வேலைகளில் ஈடுபட்டு கஷ்ட ஜீவனம் பண்ணுவர். பலனற்ற வேலைகளில் ஈடுபடுவர். வீண் அலைச்சல் மிகும். தன நஷ்டமும் கலவிக்குப் பங்கமும் ஏற்படும். தோல்வி பயம் ஏற்படும். பலவித நோய்கள் பற்றிக் கொள்ளும். அவச்சொல், பெரும் பழி, எல்லாம் அடிக்கடி வரும். இவருக்கு இதய ரோகம் ஏற்படும். மான பங்கம், கௌரவ பங்கம் ஏற்படும். ஓயாத உழைப்பும், அதைச் செய்ய முடியாத களைப்பும் ஏற்படும். வேலைக்குக் குறைந்த பலன்தான் ஏற்படும். 

  புத்தித் தெளிவு சிறிதும் இராது. நிர்ணயத் திறன் குறையும். லாபமில்லாத ஆதாயமில்லாத வேலைகளைச் செய்வர். இபப்டி பல வகையிலும் கஷ்டமே ஏற்படும். சனி, எல்லா விதத்திலும், 10-ம் இடத்தில் அசுப பலனையே தருகிறார். பெண்களுக்கு மேற்கூறிய பாதிப்புகளுக்கு நீங்கள் தாராளமாக ஆட்பட ஏதுவான காலம் இது என்பதால், திருமணமான பெண்கள் மிகவும் சிரத்தையோடு செயல்படுவது நல்லது. 

  கணவரிடமோ அல்லது அவரது உறவினரிடமோ அதிக வாக்குவாதத்தை அல்லது பிரச்சினைகளைத் தவிர்ப்பது நல்லது. புகுந்த வீட்டில் வசிக்கும்போது உங்கள் மாமியார், மாமனார் அல்லது நாத்தனார் போன்றோருடன் காரசாரமான சண்டைக்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அல்லது காட்டாமல் விட்டுக்கொடுத்துப்போகும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், அதனால் பின்னால் வரக்கூடிய பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளலம். கெட்ட பெயரும் தலைகாட்டாது. 

  இருப்பினும் ஆறாமிடத்தில் வீற்றிருக்கும் குருவின் 9-ம் பார்வை குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்திற்கு அப்படியே ஏற்பட்டாலும். வந்த சுவடு தெரியாமல் தானாகவே அடங்கிவிடும். மேலும் தொழில் ஸ்தானமான 10-ல் வீற்றிருக்கும் சனி பகவனை இந்த ஆறாமிட குருவானவர் தனது 5-ம் பார்வையால் பார்ப்பதால், இந்த சனி பகவானின் வீர்யம் குறைந்து அவரால் ஏற்படவிருக்கும் சில மன சஞ்சலங்கள் மற்றும் உடல் மற்றும் மன சஞ்சலங்கள் ஓரளவு கட்டுக்குள் வரும். 

  அதேபோல் குருவானவர் உங்கள் ராசிக்கு ஏழில் சஞ்சரிக்கும் காலத்தில் ( குருவின் சிம்ம ராசி சஞ்சாரத்தில்) இந்த இந்த 10-மிட சனியின் பாதிப்புகள் ஓரளவு குறையும். அதாவது வரும் ஆண்டு ஜூலை மாதம் முதல் சுமார் ஓராண்டு காலம் குருவின் சஞ்சாரமானது உங்களுக்கு சனியின் பாதிப்பை தகர்க்கும். உங்களில் சிலருக்கு திடீர் கல்யாணம் அல்லது கலாட்டா கல்யாணம் என்ற அமைப்பில் அவசர அவசரமாக கல்யாண ஏற்பாடுகள் நடந்து திருமணம் இனிதே நடந்தேறும். இத்தகைய திருமணத்திற்கு, உங்களின் மூத்த சகோதரர அல்லது சகோதரிகளின் பொருளாதார உதவிகளும் சரீர உதவிகளும் கிடைக்க ஏழில் வரும் குருவின் 9-ம் பார்வை மூன்றாமிடமன சகோதர ஸ்தானத்திற்க்கு ஏற்படுவதேயாகும். 

  இருப்பினும் ராகு கேதுவின் சஞ்சாரங்கள் தங்கள் ராசிக்கு சாதகமாக இல்லாத கரணத்தால், சனி பகவானின் கடைசி நேர பயணத்தில் சில சங்கடங்களும் அல்லது பிரச்சினைகள் (அதாவது 2016-ன் பிற்பாதியில் சற்று கடினமாக உங்களைத் தாக்கலாம். தெய்வ நம்பிக்கையே காப்பாற்ற முடியும். மாணவர்களுக்கு வீட்டு சூழலாலும், சில தேவையற்ற கற்பனைகளாலும், மனதை அலையவிட்டு, கல்வியில் போதிய ஆர்வத்தை குறைத்துக்கொள்ள இந்த நேரமானது அமைகிறது. சனியின் தாக்குதலில் ஆரம்ப காலம் உங்களைப் பெரிய அளவில் பாதிக்காது. 

  குருவின் தற்போதைய ஆறாமிட சஞ்சாரமும் அதைத் தொடர்ந்து வரும் ஏழாமிட சஞ்சாரமும் உங்களுக்கு 2016-ம் ஆண்டு முடியும் வரை அனுகூலமாய் உள்ளதால், பெரிய அளவில் உங்கள் நிலையானது உங்களைப் பாதிக்காது. அதன்பிறகு 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடியும் வரை உள்ள ஓராண்டு இரண்டு மாத காலத்தில் மேற்கூறிய பாதிப்புகள் கடுமையாகவே காணப்படுகிறது.பெற்றோர்களும் உறவினர்களும் மற்றும் உங்கள் ஆசிரியர்களும், உங்கள் நிலையைக் குறித்து வருத்தம்கொள்ளும் விதமாக உங்கள் நிலையானது மாறலாம். சில சமயங்களில் உங்கள் மன பாதிப்பால் எடுப்பார் கைப்பிள்ளையாக யார் எனன் சொன்னாலும் அதை நம்பும் விதமாக அப்படியே செயல்படுவீர்கள்.

  உங்கள் சொந்த புத்தியைக்கூட சில சமயம் அடகு வத்துவிடுவீர்கள். எனவே யோசித்து சற்று நிதானித்து செயல்பட்டு, படிப்பில் கருத்தூன்றி படித்தால் படிப்பில் பாதிக்குமேல் வெற்றி கிட்டும். அரசியல்வாதிகளுக்கு பத்தாமிட சனியின் ஆரம்ப காலம் பெரிய அளவில் பாதிக்காதவண்ணம் வரும் ஆண்டு ஜூலை மாதம் முதல் குருவின் சஞ்சாரம் உங்களுக்கு துணை நிற்கிறது. இதன் காரணமாக உங்களின் சொல்வாக்கு மற்றும் செல்வாக்கு போன்றவை ஓராண்டு காலத்துக்கு ந்ல்லவிதமாக செயல்படும். அதன்பிறகு சுமார் ஓராண்டு காலம் இரண்டு மாதம் சனியின் 10-மிட சஞ்சாரம் முடியும்வரை உங்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக உங்களின் கீழ் உள்ளவர்களின் செயல்கள் தலை விரித்தாடும். 

  மேலும் உங்களிடம் நெருங்கிப் பழகும் உங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சில துரோகச் செயல்களைப் புரிவார்கள். அதன் காரணமாக சில அலைச்சல்களையும் அவமதிப்புகளையும் நீங்கள் கண்டிப்பாக தாங்கியே தீர வேண்டும். வெகு நாட்களாகக் கட்டிக் காத்துவந்த மதிப்பு மரியாதையை இழக்க நேரலாம். இதற்கு உங்கள் ராசிக்கு ராகு கேது தீய சஞ்சாரமும் ஒருவகையில் காரணமாய் அமையும். வீட்டு விஷயங்களில்கூட சிலருக்கு சில துரோகச் செயல்கள் தலை விரித்தாடும்.

  அதை சர்க்கட்ட முயற்சிகள் மேற்கொள்வதைக் காட்டிலும் அவற்றைக் கண்டும் காணாமல் விடுவதே உங்களுக்கு நல்லது. மேலும் சனியின் பத்தாமிட சஞ்சாரம் முடியும்வரை நீங்கள் அடிக்கடி பணப்பற்றாக்குறையைச் சந்திக்க நேரும். எந்த பரிகாரமும் கை கொடுக்காது. ஆனால், தற்போதைய குருவின் 6-மிட சஞ்சாரத்தில் இவரது 5-ம் பார்வையால் 10ல் வீற்றிருக்கும் சனியைப் பார்ப்பதும், அதைத் தொடர்ந்து 7-ல் சஞ்சரிகக்ப்போகும் குரு தன் 5-ம் பார்வையால், லாப ஸ்தானமான 11-மிடத்தைப் பார்ப்பதும் உங்களின் பொருளாதாரப் பிரச்சினையை ஓரளவு சரிக்கட்டும்.

  குடும்பத்தாரின் தேவைகளைக் காலம் அறிந்து நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால், குடும்பத்தில் குழப்பங்களும் ஒற்றுமைக் குறையும் ஏற்படும். அதன் பயனாக உங்கள் மீது மனக் கசப்பும் வெறுப்பும் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. விஷ ஜந்துகள் குடியேறி யாருக்காவது விஷக்கடி ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறையும். சில மாணவர்கள் கல்வியின் காரணமாகவோ அல்லது வேறு வேலை விஷயமாகவோ வெளியூர் சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். 

  வீட்டில் உள்ள வடயதானவ்ர்களுக்கு உடல் நல்ம் பாதிப்படையும் . அதனால், மருத்துவச் செலவு ஏற்படும். அவசியத் தேவைகளை விட்டுவிட்டு கேளிக்கை, பொழுதுபோக்குகளில் பணத்தைச் செலவழிப்பீர்கள். அதனால், அத்தியாவசியச் செலவுகளுக்கு பணம் இல்லாமல் போய், குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும். பின்னர் கட்டாயத் தேவைகள் உருவாகிவிடுவதால், அத்ற்கு செலவழிக்க பணமில்லாமல் திண்டாடுவர். பணத்துக்காக அல்லாடும் சூழலை நீங்களே உருவாக்கிக்கொள்வீர்கள். 

  கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையோடு முக்கிய முடிவுகளை எடுக்காவிட்டால் திண்டாட நேரும். எனவே எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பி ரிஸ்க் எடுக்கவேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதன் காரணத்தால் மேலதிகாரிகளிடமும் சக தொழிலாளர்களிடமும் சுமுக நிலை மாறி நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். சிலர் அலுவலகப் பிரச்சினை காரணமாக வேண்டாத இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். சிலர் அவர்கள் தகுதிக்கு தகுந்த வேலை அமையாமல், தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்படுவர்.. உடல்நலத்தில் கவனம் தேவை. கடுமையான நோய் பாதிப்புகள் இல்லையென்றாலும், அலர்ஜி, தோல் நோய்கள் போனறவை ஏற்படும்.

  தொழில் ரீதியான பின்னடைவுகளும் ,சில பாதிப்புகளும் ஏற்படும். தொழில், வியாபாரம் மந்த கதியை அடையும். அதன் காரணமாக பணப்புழக்கம் குறையும். பணத்தட்டுப்பாடு எல்லை மீறிப் போவதால், சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அலுவலக வேலையில் உள்ளவர்களும் பிரச்சினையின் தீவிரத்தை தாங்கமுடியாமல், விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். சிலர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சிரமத்துக்கு ஆளாவார்கள். சிலர் போலித் தனமான ஜம்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். 

  தந்தைக்கு உடல்நல பாதிப்புகளும் கண்டங்களும் ஏற்படக்கூடும். சகோதரனுக்கும் கண்டங்கள் ஏற்படும். அதுபோல உங்களுக்குமே கண்டங்கள் ஏற்படும். எனவே ஆயுஷ் ஹோமம் அல்லது மிருத்யஞ்ச்ய ஹோமம் இவற்றை செய்வதன் மூலம் ஆயுளுக்கு ஏற்படும் கணடங்களை தடுத்துக்கொள்ளலாம். இப்படி ஹோமம் செய்துகொண்டாலும் கூட தாய் அல்லது தந்தை வழியில் யாருக்காவது காரியம் செய்யவேண்டிவரும். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் கண்டங்கள் ஏற்பட வழியுண்டு என்பதால், மேற்கணட ஹோமங்களை செய்துகொண்டால் , தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதுபோல ஆகும். புத்திர –புத்திரிகளுக்கும், மனைவிக்கும் கூட தோஷம் ஏற்படும். எனவே ஹோமம் செய்துகொள்வது அவசியம்.

  இந்த வருடம், ராகு உங்கள் ராசிக்கு 7-ம் இடமான சிம்ம ராசியிலும் கேது உங்கள் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். 7-மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு திருமணத் தடைகளை உண்டாக்குவார். அல்லது திருமண ஏற்பாடுகள் தாமதமாகும். சில புதுமணத் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல், வாழ்க்கையையே பிரச்சினையாக்கிக் கொள்வார்கள்.அதேபோல சில குடும்பங்களில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன்-மனைவி உறவு சொல்லிக்கொள்ளும் அளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஜாதக திசா-புத்திகள் யோகமாக இருந்தால், திருமணத் தடைகள் விலகும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேரலாம். 

  அதே சமயம் வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டும். அவருக்கு ரத்தம் சம்பந்தமான பாதிப்புகள் , விஷம் சம்பந்தமான பாதிப்புகள் அலர்ஜி ஆகியவை ஏற்படும். சிலர் ஒழுக்க நிலையில் பிறழ்ந்து தடுமாறிப் போகும் சூழ்நிலை உண்டாகும். அந்நியப் பெண்கள் , ஒழுக்கக் குறைவான பெண்களின் நட்பும் ,பழக்கமும் உங்களுக்கு ஏற்படக்கூடும். அது உங்கள் கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துவிடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய உதவிகள் உங்களுக்கு அவ்வப்போது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 

  அவர்களுடன் சேர்ந்து புதிய தொழில் கூட்டுத் தொழில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் எச்சரிக்கையும் அவசியம். இல்லாவிட்டால் ஏமாற்றத்தை தவிர்க்க முடியாது. ஆனால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் உங்களைவிட்டு மாறினாலும்கூட சிலருக்கு தொழில்ரீதியாகப் புதிய கூட்டாளி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. திடீரென எதிர்பாராத வருமானம் வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. சிலருக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தாலும்கூட பழைய ந்ண்பர்களில் சிலர் உங்களைவிட்டுப் பிரிந்து செல்லக்கூடும். சிலர் தங்களது தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள். சிலருக்கு இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலையும் உருவாகும். 

  அடிக்கடி வெளியூர்ப் பயணம் செய்யவேண்டியிருக்கும். சிலருக்கு வண்டி வாகனங்கள் விரயச் செலவை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் வெளிவட்டார பழக்கவழக்கங்களில் சில பிரச்சினைகள் உருவானாலும் பிறகு விரும்பியபடி காரியங்கள் பலிதமாகும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு முடிவில் வெற்றி உண்டாகும். பண வசதியைப் பொறுத்தவகையில் இல்லை என்ற குறை நீங்கி எண்ணங்கள் ஈடேறும். இரண்டாம் இடத்து குரு உங்கள் வாக்கு சாதுர்யத்தை மேம்படுத்தி மற்றவர்களை உங்கள் வசப்படுத்தி உங்கள் திட்டங்களையும் தேவைகளையும் நிறைவேற்றச் செய்வார். 

  அத்தியாவசியத் தேவைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேறும். மனைவியும் பிள்ளைகளும் கேட்டதை வாங்கிக் கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். உங்கள் உறவினர்களையும் மனைவிவழி உறவினர்களையும் அனுசரித்து வரவேற்று உபசரிப்பதன்மூலம் சொந்த பந்தங்களின் அன்புக்கு ஆளாகலாம். உங்கள் மனோபாலம் அதிகமாகும். எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் துணிவு கிடைக்கும். ஆனால் முடிவெடுக்கும்போதுதான் குழப்பங்கள் ஏற்பட்டு கால தாமதமாகும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், திடீர் தொல்லைகள் ஏற்படும்.

  உங்கள் ஜென்ம ராசியில் கேது சஞ்சாரம் செய்வதால்,மனதில் தேவையற்ற குழப்பங்கள் அதிகமாகும். காரணம் தெரியாத வீண்பயம் மனதில் இருக்கும். எப்போதும் முகத்தில் சோகம் குடிகொண்டிருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள் எல்லாம் அப்போதைய சூழ்நிலைக்கு பயனற்றதாக இருக்கும். உங்கள் உடல்நலத்திலும் கவனம் தேவை. உங்கள் தாயாரின் உடல்நலத்திலும் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் பகைமையும் ஏற்படும். 

  சிலர் பெற்றோரைப் ப்ரிந்து வாழ வேண்டிவரும். தொழில் ரீதியாகவும் சில இடையூறுகள் ஏற்படும். அதன்மூலம் மனசஞ்சலம் ஏற்பட்டு மன நிம்மதி கெடும். மாணவர்கள் இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் சிரத்தையுடன் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் பெரிய புத்திசாலியாகவும் எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை படைத்தவராக இருந்தாலும் இந்த சமயத்தில் அவை எடுபடாமல் போகும். எடுக்கும் முயற்சிகளிலும் காரியங்களிலும் தடை ஏற்படும் காலம் இது. தொழிலாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். 

  மின்சாரம், நெருப்பு ஆயுதம் இவைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மனதை ஒருமுகப்படுத்தி, ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபட்டால், குருமார்களின் தரிசனம் , சாதுக்களின் நட்பு பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். உங்கள் கௌரவம் உயரும். புகழ், பாராட்டு கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகத் தொடர்புகள் அதிகரிக்கும். ஜாதகத்தில் அந்த தசாபுத்திகள் நடந்தால், ஜோதிடம், வைத்தியம், தியானம் யோகா போன்ற கலைகளில் ஈடுபாடு ஏற்படும். 

  சனியும் சேர்ந்து சம்பந்தம் ஏற்பட்டால், மாந்த்ரீகம், ஹிப்னாட்டிசம் இவைகளில் ஆர்வம் ஏற்படும். உங்கள் செல்வாக்கு புகழ் இவைகளில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் பங்கு கிடைக்கும். இருவரும் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவதால், சந்தோஷமும் வாழ்க்கையில் நிறைவும் ஏறப்டும். சிலருக்கு ,பிள்ளைகள் பெற்றோர் சொல்லைக் கேட்காமல் போகலாம். ஒழுக்கக் குறைவால் எல்லோருக்கும் கேவலத்தை ஏற்படுத்தி சங்கடங்களை உண்டுபண்ணக்கூடும். பிள்ளைகள்மீது கவனம் செலுத்துவது மட்டுமின்றி அணுசரணையாக இருப்பதும் அவசியம். சகோதர வகையில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் விட்டுக்கொடுத்து நடந்து அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளும் சாமர்த்தியம் உங்களுக்கு கை கொடுக்கும்.

  பயணங்களின்போது கவனமாக இல்லையென்றால் கைப்பொருள் திருட்டுப் போகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிட்டால், அவர்களது பிரச்சினை உங்களையும் தொற்றிக்கொகொள்ளும். அடிக்கடி ஏதாவது ஒரு துக்க செய்தி வந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக மனதில் வேதனைகளும் கலக்கங்களும் சூழ்ந்துகொள்ளும். எதிர்பாராமல் திடீர் திடீரென கஷ்டங்களும், வேதனைச் சம்பவங்களும் உங்களுக்கு உருவாகும். .இந்த் சந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகம். கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். 

  அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கூட்டுத்தொழில் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். 

  மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது.

  பரிகாரம்:

  உங்களுடைய ராசிக்கு ராகு கேதுவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், வெள்ளிக் கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபடவும். கணேச பகவானின் கோவிலுக்கு சென்று கோவிலை சுத்தம் செய்வதுபோன்ற சேவைகளை செய்யவும். கொள்ளு தானம் செய்யவும். குரு பகவான் ஆண்டின் முற்பகுதியில், சரியான ஸ்ஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும். சனிக் கிழமைகளில், சனீஸ்வரனின் ஆஅல்யம் சென்று, எள்தீபம் ஏற்றி வழிபடவும்.

  இந்த 2016ம் ஆண்டு உங்களுக்கு யோகமாக வாழ்த்துக்கள்!.

  அனைத்து இராசிகளுக்கும்.
  மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்
  சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்
  தனுசுமகரம்கும்பம்மீனம்
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் இராசி பலன்கள் -கும்ப இராசி Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top