Breaking News

சுமந்திரனுக்கு பிறந்தநாள் பரிசாக ஐங்கரநேசனின் பதவி ? நடந்தது என்ன? (அதிர்ச்சித் தகவல்கள்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் சுமந்திரனின் பிறந்தநாளான இன்று ஐங்கரநேசனை அமைச்சலிருந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து நீக்க முற்பட்டிருக்கிறது தமிழரசுக்கட்சி, வடக்கு மாகாணசபையின் 45ஆவது அமர்வு இன்று நடைபெற்றிருந்த நிலையில் இரண்டு விடயங்கள் நீங்கலாக ஏனைய விடயங்கள் அனைத்தும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை குற்றம் சாட்டும் வகையிலேயே அமைந்திருந்தன.

மரம்நடுகை மாதத்தில் (கார்த்திகை) மரம் நட்டமை தொடக்கம் வைரமுத்துவை உழவர் விழாவுக்காக அழைத்தமை வரையில் குற்றச்சாட்டுக்களை அடுக்கி தீர்மானத்தை முன்மொழிந்தார் வன்னி மாவட்ட மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன். இதனை அடுத்து மாகாணசபை உறுப்பினர்கள் ஆனோல்ட், சயந்தன், சுகிர்தன், இந்திரராஜா மற்றும் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

பொதுவான விடயத்தினை முன்வைப்பதாகத் தொடங்கிய விவாதம் எந்தக்கட்சியையும் சாராத ஐங்கரநேசனை மட்டும்நோக்கியதாக அமைந்த நிலையில் எதிர்ப்புக்கள் எதுவும் இல்லாத நிலையில் குறித்த அமைச்சுத் தொடர்பில் முதலமைச்சர் விசாரிக்கவேண்டும் என்ற பிரேரணை எதிர்ப்புக்கள் எதுவும் அற்ற நிலையில் நிறைவேறியிருக்கிறது.

விக்கினேஸ்வரனுக்கு எதிராக கையெழுத்திடாமை! 
சுமந்திரன் பொப்பிமலர் அணிந்தபோது கார்த்திகைப் பூ அணிந்து மரநடுகை மாதம் கடைப்பிடித்தமை!

தொடக்கத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்டு குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் ஐங்கரநேசனும் அதற்கு பதிலளித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். இடைநடுவே வேறு நிகழ்விற்காக முதலமைச்சர் வெளியேறிய நிலையில் அமைச்சர்கள் குருகுலராஜா, டெனீஸ்வரனும் சபையிலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.

இன்றைய அமர்வினை முற்றுமுழுதாக தமிழரசுக்கட்சி ஐங்கரநேசனுக்கு எதிராக திருப்பியிருந்ததற்கான காரணம் என்ன? என்று தமிழ்கிங்டொம் அலசியபோது அதிர்சி தரும் சம்பவங்கள் அம்பலத்துக்கு வந்திருக்கின்றன.

ஆரம்பத்திலிருந்தே சுமந்திரனின் அவுஸ்ரேலிய விஜயத்திலிருந்து சூடுபிடித்திருந்த முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத்தீர்மானத்திற்கு பலவழிகளில் முயற்சித்தும் இறுதியில் முதலமைச்சர் தன்நிலையை திடமாக உறுதிப்படுத்திய நிலையில் முதலமைச்சருக்கு மிக நெருக்கமாக செயற்பட்டுவருவதாக அறியப்பட்ட ஐங்கரநேசன்மீது கைவைப்பதன் ஊடாக முதலமைச்சரை தனிமைப்படுத்தும் ராஜதந்திரம் கையாளப்பட்டிருக்கின்றது.

முதலமைச்சர் மீதான நகர்வுகள் ஆரம்பமானதிலிருந்து முதலமைச்சரைவிட வெளியில் இருந்த முக்கியமான சில உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருக்கின்றனர் இந்தநிலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் உதயமான தமிழ் மக்கள் பேரவை மேலும் முதலமைச்சரை வலுப்படுத்தும் ஒரு ராஜதந்திரமாக அவதானிக்கப்பட்டு வந்திருந்தது.





இந்த நிலையில்தான் முதலமைச்சர் அண்மையில் தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரையை முன்வைத்திருந்தார் அத்தோடு தொடர்ந்தும் உறுதியாக குரல்கொடுத்துவந்த முதல்வர் கூட்டமைப்பை விட ஒரு படிமேலே போய் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் தன்னால் திரட்டப்பட்ட 4000 இற்கு மேற்பட்ட காணாமல் போனோரின் முறைப்பாடுகளை சாட்சியங்களுடன் சமர்ப்பித்திருந்தார். இது சுமந்திரன் தரப்பிற்கு கடும் கோபத்தை உண்டுபண்ணிவிட்டதாக தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாகாணசபை உறுப்பினரொருவர் தெரிவிக்கின்றார். அரசைப்பற்றி நற்சான்றிதழை சம்பந்தன் தரப்பு ஐ.நா ஆணையாளருக்கு கொடுக்கும்போது வடக்கு முதல்வர் விடாப்பிடியாக இருப்பது அவர்களை சினங்கொள்ள வைத்திருக்கிறது.

சுமந்திரனுக்கு பிறந்தநாள் பரிசு வழங்க முற்பட்ட உறுப்பினர்கள், ஏற்கனவே சம்பந்தனின் பிறந்தநாள் அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை சேர்ந்த சிவமோகனை தமிழரசுக்கட்சிக்கு உள்வாங்கிய நிலையில் சுமந்திரனின் பிறந்தநாளில் முதலமைச்சரை நெருங்கமுடியாத நிலையில் அடுத்த எதிரிகாக தமிழரசுக்கட்சியால் நோக்கப்பட்ட ஐங்கரநேசனை அமைச்சிலிருந்து பதவி விலக்கி முதலமைச்சரை தனிமைப்படுத்தி சுமந்திரனுக்கான பரிசை வழங்கும் திட்டத்துடன் தீர்மானத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதன் முதற்கட்டமாக நேற்று(8.02.2016) அன்று தனியார் விடுதியொன்றில் கலந்துரையாடிய சுமந்திரன் தரப்பு ஏற்கனவே தமது தரப்பான ஆனல்ட்,சயந்தனின் நடவடிக்கைகள் வெற்றியளிக்காத நிலையில் புதிதாக ஒருவரை களமிறக்குவதாக அதற்கு புளட்டினைச் சேர்ந்த ஏற்கனவே தான் குண்டகசாலையில் டிப்புளோமா கற்றதாக சொல்லிவரும் லிங்கநாதனை அணுகி அடுத்த விவசாய அமைச்சு தருவதாக உறுதியளிக்கப்பட்டு வரைபு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இது நேற்று இரவே முதலமைச்சரின் காதுக்கு எட்டிவிட்டதாக முதலமைச்சு வட்டாரங்களிலிருந்து அறியவருகின்றது.

இது தொடர்பில் சில உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அதே நாளில் ஐங்கரநேசனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான தீர்மானத்தடன் அது நின்று போனதாக தெரியவருகிறது. புளொட் மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதனுக்கு விவசாய அமைச்சு வழங்குவதாக சுமந்திரனால் வாக்குறுதி வழங்கப்பட்டதே அவர் தீர்மானத்தை முன்மொழியக்காரணம் என்று சொல்லப்படுகிறது.

தமிழ்மக்கள் பேரவைக் கூட்டத்துக்கு முதலமைச்சர் கலந்து கொள்ளவேண்டாம் எனத் தெரிவித்து சேகரிக்கப்பட்ட கையெழுத்து வேட்டையில் ஐங்கரநேசன் கையெழுத்திடாமை, சுமந்திரன் பொப்பிமலர் அணிந்து கொழும்பு அரசுடன் இராணுவத்தினருக்கு அஞ்சலிசெலுத்தியவேளை  ஐங்கரநேசன் கார்த்திகைப் பூ அணிந்து மாகாண அமைச்சர்,உறுப்பினர்களுடன் கிட்டு பூங்காவில் நிகழ்வில் பங்கேற்றமை உட்பட்ட காரணங்களே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவ்க்கினறன.
தீர்மானம் கொண்டுவருவதற்கு முதல்நாள் சந்திப்பு

தீர்மானம் கொண்டுவருவதற்கு முதல்நாள் சந்திப்பு

இந்த கார்த்திகை மலர் சூட்டி நடைபெற்ற மலர்க்கண்காட்சி நிகழ்விற்கு சுமந்திரன் தரப்பு மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே எந்த அமைச்சரோ உறுப்பினரோ மோசடியில் ஈடுபட்டதாகவோ அல்லது வேறு தவறுகள் இருந்தால் அதனை தகுந்த ஆதாரத்தோடு சபையில் சமர்ப்பித்தோ அல்லது ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டுவந்தோ இருக்கலாம் ஆனால் இன்றைய அமர்வில் அவைத்தலைவருடன் முதலமைச்சர் முரண்படும் வகையில் நிகழ்வு மோசமடைந்திருப்பது கவலைதருவதாக இருப்பதாக நோக்கர்கள் கருதுகின்றனர்.


அனைத்து ஐயங்களுக்கும் விளக்கமளித்தார் விக்கினேஸ்வரன்(காணொளி)

கைதிகள் தடுத்து வைத்திருப்பது சரியாம்-எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)
சுமந்திரனுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை -செல்வம்,சிறீதரன்(காணொளி)

சந்திரிக்கா கொடுத்த வீட்டிலேயே சம்பந்தன் இன்றும்(காணொளி)

முதலமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம் ? -சின்ன கதிர்காமர்(காணொளி)

துரோகி சுமந்திரனே வெளியேறு! அவுஸ்திரேலியாவிலும் மூக்குடைபட்டார் சுமந்திரன்!(காணொளி)

மேலும்