Breaking News

எதிர்ப்பின் காரணமாக இலண்டன் கூட்டத்தை இரத்து செய்த சுமந்திரன்(காணொளி)

பிரித்தானிய தமிழர்களின் கடும் எதிர்ப்புக்களை அடுத்து சுமந்திரன் தனது பிரித்தானிய பயணத்தை கைவிட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பிரச்சார வசூலுக்காக இலண்டன் பயணத்தை ஒழுங்கு செய்திருந்த த.தே.கூட்டமைப்பு இலண்டன் கிளை மண்டபங்களை ஒழுங்கு செய்ததோடு சுமந்திரனோடு இராப்போசனம் என்ற போர்வையில் குறைந்தது இலங்கை ரூபாய் பத்தாயிரம் என பற்றுச்சீட்டுக்களை விற்பனை செய்திருந்தது. இருந்தும் இளைஞர்கள் சுமந்திரனை சந்திக்கும் நோக்குடன் காத்திருந்ததாகவும் அங்கிருந்து அறியக்கிடைக்கிறது.

முன்னதாகவே சுமந்திரனின் பிரித்தானிய விஜயத்தை கண்டித்து அங்குள்ள இளைஞர்கள் முகநூல் வாயிலாக பலத்த எதிர்ப்புக்களை தெரிவித்திருந்த நிலையில்  கேள்வி கணைகளுக்கான ஆயத்தங்கள் மற்றும் இளைஞர்களின் மதிப்பளிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சுமந்திரனின் நிதிசேகரிப்பும் இராப்போசன விருந்தும் கைவிடப்பட்டுள்ளதாக த.தே.கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை அறிவித்துள்ளது.

காரணம் எதிர்ப்பாக இருக்கின்றபோதும் அதனை சொல்லாது தற்போது பெரும்மோசடி குற்றம் சாட்டப்பட்டு நடைபெற்றுவரும் இலங்கை மத்தியவங்கி பிணைமுறி மோசடி அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கும்போது குற்றம் சாட்டப்படும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாதாடுவதற்காக பாராளுமன்றில் சமூகமளிக்க வேண்டியிருப்பதாக சொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஏற்கனவே கனடா கிளை பொங்கல் விருந்தும் இராப்போசனமும் ஒழுங்கு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்ததோடு அதற்காக ஏற்பாட்டாளர்களை தொடர்புகொள்ளுமாறும் கோரப்பட்டிருந்தது.

அவர்களது செய்திக்குறிப்பில்,  இ.தஅக இன் துணைப் பொதுச் செயலாளரும் அதன் பேச்சாளருமான ம.ஆ. சுமந்திரன் நா.உ ததேகூ (கனடா) நடாத்தும் பொங்கல் இரா விருந்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

தொடர்புகளுக்கு/ For more information - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) / TNA - Canada 647-763-9410 / 416-281-1165 / 416-282-0947 / 905-944-1611







அம்பலமாகியது மாவையின் வசந்த மாளிகை(படங்கள்)

5 தம்பிகளை வைத்து 50 ஆண்டுகள் ஓட்டிவிட்டார் மாவை(காணொளி)