Breaking News

படுகொலை முயற்சியிலிருந்து தப்பித்தார் முதலமைச்சர்(காணொளி)

முதலமைச்சர் அலுவலகத்துக்கு
அருகிலுள்ள பாதுகாப்பற்ற கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட நிலையிலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பயணித்த வாகனம் கடவையைக் கடந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

முதலமைச்சர் வாகனம் கடந்து செல்வதற்கு அங்கு கடமையிலிருந்து பொலிஸாரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதோடு யார் தான் எதை சொன்னாலும் வாகனத்தின் பாதுகாப்பு என்பது சாரதியின் முடிவிலேயே தங்கியிருக்கின்றது இருந்தும் பொலீசார் ரயில் வருகின்றதா என ரயில் பாதையைப் பார்த்து, வரவில்லையென்றவுடன் வாகனத்தை கடக்க சைகையும் காட்டியுள்ளனர் தெய்வாதீனமாக ரயில் எதிர்பார்க்கப்பட்டதைவிட காலதாமதமாக வந்துள்ளதால் இன்று முதல்வர் காப்பற்றப்பட்டுள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.



இது முதல்வருக்கு ஏற்பட்ட இரண்டாவது சம்பவம் என்றும் அறியவருகின்றது. கடந்த இரு மாதங்களுக்கு முன்னரும் இதுபோன்ற ஒரு பாதுகாப்பற்ற கடவையில் முதலமைச்சர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார். ரயில் வருவதற்கு நீண்ட நேரமிருப்பதாக சொல்லப்பட்டே முதல்வர் கடவையில் அழைத்துச்செல்லப்பட்டதாகவும் முதல்வர் தனது சொந்த பாதுகாப்பில் அக்கறை செலுத்துவது மிகக்குறைவு என்றும் இவ்வாறான நிலை சதிகாரருக்கு வாய்ப்பாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உண்மையிலேயே புகையிரதம் நெருங்கிவரும்போது அதனை தாண்டிச்செல்ல முற்படும் வாகனங்கள் கடவையில் ஏற்படும் காந்தபுல தாக்கத்தால் வாகன இயந்திரம் இயக்கம் நின்றுவிடும் என்பதோடு வாகனத்தை மனிதவலுமூலம் தள்ளியும் கொண்டு செல்லமுடியாது. இவ்வாறு அண்மையில் யாழில் புகையிரத கடவையை கடந்த பொறியியலாளர் ஒருவரும் கிளிநொச்சியில் ஒரு மோட்டார் சயிக்கிளுடன் சென்ற ஒருவரும் வாகன இயக்கம் நின்றமையால் உயிரிழந்துள்ளமைமை குறிப்பிடத்தக்கது.

இனவளிப்பு தீர்மானம், தேர்தலில் நேரடியாக த.தே.கூட்டமைப்பை ஆதரிக்காமை,தொடர்ந்தும் கூட்டமைப்பு தலைமையின் இணக்க அரசியலுக்கு ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் தொடர்ந்தும் வடக்கு வரும் ஐ.நா மற்றும் உலகநாடுகளின் பிரதிநிதிகளிடம் முதலமைச்சர் தமிழர் உரிமை மற்றும் நிரந்தர தீர்வு தொடர்பில் தனது உறுதியான நிலைப்பாட்டினை வலியுறுத்திவருவதை விரும்பாத சில சக்திகளின் திட்டமாக இருக்கலாம் என்கின்றனர் அவதானிகள்.

இது போன்றே உறுதியாக குரல்கொடுத்துவந்த மன்னார் ஆயர் தள்ளாடிமுகாமிற்கு நிகழ்வொன்றிற்காக அழைக்கப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட உணவில் நஞ்சூட்டி வழங்கியதன் பின்னரே அவர் நிரந்தரமாக நோய்வாய்ப்பட்டு உரிமைக்குரலிலிருந்து ஒதுங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் என்று செய்திகள் வந்திருந்தமை இங்கு நோக்கத்தக்கது.


தொடர்புடைய முன்னைய செய்திகள்


தடையையும் மீறி நிகழ்வில் கலந்துகொண்டார் முதலமைச்சர்(முழுமையான உரை)

சர்வதேச விசாரணையே தேவை விக்கினேஸ்வரன் செவ்வி(காணொளி)


தலைவர் பிரபாவிற்கு பிறகு காலத்தின் பதிவே விக்கினேஸ்வரன் -சிறீதரன்(காணொளி)

நேரடியாக களம் இறங்கியது சனல்-4-முதலமைச்சர்,ரணில் இடம் நேர்காணல் (காணொளி இணைப்பு)

தமிழ்மக்கள் பேரவை ஏன் முதலமைச்சர் விளக்கம்(காணொளி இணைப்பு)

இளைய தலைமுறையின் சுதந்திர வேட்கையை நிர்மூலமாக்கத் திட்டம்-முதலமைச்சர்(காணொளி)


எமது சமூகத்தைப் புகலிடமற்றவர்கள் ஆக்குவதே நோக்கம்-முதலமைச்சர்(காணொளி)

வடக்கு முதலமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் சிலர்

யாருக்காகவும் மேடை ஏறமாட்டார் முதலமைச்சர்!(அறிக்கை இணைப்பு)


முதலமைச்சரின் சாட்டையடியும் கூட்டமைப்பின் நிலைப்பாடும் – சிறீ­தரன்!

பயங்கரவாதிகளைப்போன்று இன்னமும் நடத்துகின்றனர் - சமந்தாவுடனான சந்திப்பில் விக்கினேஸ்வரன்

ஐ.நா விசாரணையில் கோரப்படால் சாட்சி வழங்குவேன்-முதலமைச்சர் விக்கி


முதல்வரின் காணொளி - கலக்கத்தில் கூட்டமைப்பு