Breaking News

சம்பந்தனின் உரையாற்றியபோது பவர் கட் ஆனதால் பதட்டம்(காணொளி)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த
மாபெரும் பொங்கல் விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சம்பந்தனின் உரை ஆரம்பமாகி சில நிமிடங்களில் மின்சாரம் தடைப்பட்டதால் ஆதரவாளர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டதாகவும் சுமந்திரன் மேடைக்கு அருகில் யாரையும் விடவேண்டாம் என்று கூறி உடனடியாகவே சம்பந்தனுக்கு அருகில் வேறு நபர்கள் அணுகாதவாறு பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்கள் பார்த்துக்கொண்டதோடு ரோச் வெளிச்சங்கள் பாவித்து சுதாகரித்து கொண்டனர். பின்னர் சம்பந்தனுக்கு அருகேவந்த சுமந்திரன் ஐயா கறண்ட் இப்போதைக்கு வராதுபோல நீங்கள் பேசுங்கோ என்று சொல்லி சம்பந்தனின் மேசையை மக்கள் முன் நகர்த்த முயற்சித்தபோது சம்பந்தன் அதற்கு சம்மதிக்காது அதே இடத்திலிருந்தே தொடர்ந்தும் உரையாற்றினார்.

ஒலிவாங்கி வேலைசெய்யாததால் சம்பந்தரின் உரையை பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மீண்டும் மறு ஒலிப்பதிவு செய்தார் இருந்தும் சம்பந்தன் பேசுவது விளங்கிறது என ஆதரவாளர்கள் கூறி சம்பந்தனை தொடர்ந்தும் உரையாற்றுமாறு கூறினர்.


மின்சாரம் தடையாவது வழமையானது என சம்பந்தனுக்கு சொல்லப்பட்டு அவரை சாந்தப்படுத்தி தொடர்ந்தும் ஒலிபெரிக்கியின்றி உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே 7நிமிடங்களின் பின்னர் மின்சாரம் மீண்டும் வழமைக்கு வந்தது.

இருந்தும் சம்பந்தன் தனது உரையின்போது சம்பந்தமில்லாதவாறு சில கருத்துக்களை பேசியிருந்தார் அவற்றில் முக்கியமாக யாழ்ப்பாணத்திற்கு அடுத்தபடியாக தமிழர்கள் அதிகமாக வாழும் மாவட்டம் மட்டக்கிளப்பு என்றும். தந்தை செல்வா தனக்கு தம்பி என்றும், ஜெனாதிபதி சிறிசேன பிரதமர் ஆக இருக்கின்றார் மைத்திரிபால அவர்கள் தலமை அமைச்சர் என்றும் மின்சாரம் தடையானபோது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் பேசியதை அவதானிக்க முடிந்தது.

சம்பந்தனின் போக்கு சரியல்ல அரசோடு ஒத்து ஓடுகிறார் என இடையிடையே கருத்து சொல்லிவந்த சிலருக்கு சம்பந்தன் இன்று பரிசு வழங்கி அவர்களை சமாதானப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அவரது முழுமையான உரை



தொடர்புடைய முன்னைய செய்திகள்

எழுக தமிழை ஏன் குழப்புகின்றீர்கள் -வியாளேந்திரன் எம்.பி. கேள்வி(காணொளி)





முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்