Breaking News

இந்த ஆண்டு குருப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி? (காணொளி)

ஜோதிட சாஸ்திரத்தின்படி 02.08.2016 இல்
மாற்றமடையும் குருபெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு எப்படி என்பதை அறியத்தரும் நோக்குடன் கீழ்வரும் காணொளி உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் தமிழ்கிங்டொம் இணையம் மகிழ்ச்சிகொள்கின்றது.

குரு பகவான் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். இவருக்கு ஆங்கிரஸன் எனவும் பொன்னவன் என்றும் பல பெயர்கள் உண்டு. வியாழன் என்றும் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்றும் அழைக்கப்படுகிறார் குரு பகவான்.

வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த துர்முகி ஆண்டு ஆடி மாதம் 18ம் தேதி 2.8.16 செவ்வாய்க்கிழமை தட்சிணாயன புண்ணிய கால கிரீஷ்ம ருதுவில் கிருஷ்ண பட்ச அமாவாசை திதி மேல்நோக்குள்ள பூசம் நட்சத்திரம், ஸித்தி நாமயோகம், சதுஷ்பாத நாமகரணம், காலை மணி 9.23க்கு கன்யா லக்னத்தில் குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் பிரவேசம் செய்கிறார்.


1.9.17 வரை கன்னி ராசியில் குரு பகவான் அமர்ந்து தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார்.

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி இராசிக்கு ஆடி 27ம் நாள், 11.8.2016 வியாழன் அன்று இரவு 9:28 மணி அளவில் பிரவேசிக்கிறார்.

ஆக மொத்தத்தில் ஆனி போய் ஆடி வந்தால் சில ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நன்மையும், சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களும், சிலருக்கு லேசான பாதிப்பும் ஏற்படும்.

மனிதர்களின் வாழ்வில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம்.

இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை.

அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம். குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம்.

நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார் எப்ப கல்யாணம் நடக்கும் என்று ஜோதிடரிடம் கேட்டால் அடுத்த ஆண்டு வியாழ நோக்கம் வரும் போது திருமணம் முடிக்கலாம் என்று கூறுவார்கள்.

பொதுவாகவே ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ,திசா புத்திகளின் அமைப்பை கொண்டு திருமண காலம் அமைகிறது. திருமணகாலத்திற்கு அவருக்கு நடக்கும் தசாபுத்தி சரியாக அமையாதபொழுது,அவரின் ராசியிலிருந்து குரு,2,5,7,9,11ம் இடத்தில் நிற்கும்பொழுது திருமணத்தடை நீங்கிறது. இதுவே குரு நோக்கமாகும்.

இன்னும் தெளிவாக சொல்வதன்றால்,ஆண்களுக்குகோச்சாரப்படி குரு உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது.

பெண்களுக்கு கோச்சாரப்படி வியாழன் குரு உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ அல்லது எட்டாம் இடத்தயோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது.

புத்திரம், அறிவு விருத்திக்கு குரு காரகன் ஆவார். ஆண் கோள். ஆகாயத் தத்துவக்கோள். இக்கோள் சூரியனுக்கு ஐந்தாவது வட்டத்தில் உள்ளது. குரு பகவானுக்கு தனுசு, மீனம் ராசிகள் ஆட்சி வீடு. தனுசு ராசியில் மூலத்திரிகோண பலம் அடைகிறார்.

கடக ராசியில் பரம உச்சம் அடைகிறார். மகர ராசியில் பரம நீசம் அடைகிறார். ஒரு ராசியில் ஒரு ஆண்டுகாலம் அவர் சஞ்சாரம் செய்கிறார்.



இவ்ஆண்டிற்கான பலன்கள்



உங்கள் பிறந்த திகதிக்கான பலன்கள்