விக்கினேசை மாற்றுவதற்கு மூன்று திட்டங்கள்-சுமந்திரனணி விளக்கம்(காணொளி) - THAMILKINGDOM விக்கினேசை மாற்றுவதற்கு மூன்று திட்டங்கள்-சுமந்திரனணி விளக்கம்(காணொளி) - THAMILKINGDOM

 • Latest News

  விக்கினேசை மாற்றுவதற்கு மூன்று திட்டங்கள்-சுமந்திரனணி விளக்கம்(காணொளி)

  வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனை வீட்டுக்கு அனுப்புவோம் என சுமந்திரன் தரப்பு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  இன்று யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழரசுகட்சி உறுப்பினர்களின் ஊடக பேச்சாளராக கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் என்பவரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

  முதலமைச்சரை பதவிநீக்கம் செய்வது என்பதில் உறுதியாகஉள்ளோம் அதற்காக 3தெரிவுகளை நாம் கொண்டுள்ளோம். அதாவது வடமாகாணசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவது அல்லது ஆளும் கட்சிக்குள் ஒருவரை தலைவராக தெரிவு செய்து முதல்வராக அவரை தெரிவு செய்வோம் எல்லா தெரிவுகளுக்குமுரிய முன்னேற்பாடுகளுடனேயே நாம் இருக்கிறோம்.

  இன்னும் ஒன்றரை வருடங்களே மாகாணசபை காலம் இருப்பதால் அந்த ஒன்றரை வருடங்களுக்கு கூட முதலமைச்சராக பதவியில் இருப்பதற்கு நாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

  யார் புதிய முதலமைச்சர் என்பதில் சீ.வி.கே சிவஞானம் அவர்கள் தமிழரசுக்கட்சியின் பெரும்பாண்மை உறுப்பினர்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  முதலமைச்சருக்கு எதிரான அணியில் இன்றுவரை செயற்படும் தமிழரசுக்கட்சி -13 உறுப்பினர்களும் மற்றும் முஸ்லீம் கட்சிகளை சேர்ந்த இரு உறுப்பினர்களும்  தொடர்புடைய முன்னைய செய்திகள்  இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

  இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)


  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: விக்கினேசை மாற்றுவதற்கு மூன்று திட்டங்கள்-சுமந்திரனணி விளக்கம்(காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top